Tuesday, February 9, 2010

சூலம்

சூலம்

வடக்குத்தெரு ராமசாமி
வட்டிப்பணம் தந்து ஆறுமாதமாகிறது

வசூலிக்க கிளம்புகையில்
தொலைக்காட்சி ஜோதிடசிகாமணி
மேஷ ராசி அன்பர்களுக்கு
வடக்கே சூலம்
தென்கிழக்கு திசையே உகந்தது
உகந்த நிறம் பச்சை

பச்சை சட்டையுடன்
பின்வாசல் வழியாக கிளம்பினேன்
தெற்குதெருவில் நுழைந்து
மேற்கில் ஒரு முட்டுச்சந்தில்
மதில்மேல் ஏறிக்குதித்தேன்
‌பிறகு கிழக்குப்பக்க
தேனீர்க்கடையில் நுழைந்து
தென்கிழக்காக வ‌ந்து
ராமசாமி வீட்டுக்குள் குதித்தேன்

சூலத்தை குழப்பிவிட்டு
வீட்டுக்குள் நுழைகையில்
சன்னமாய் கேட்டது
‌சில விசும்பலொலிகள்
‌சில ஒப்பாரிகள்

நேற்று இரவு யாரோ
டாஸ்மாக் கடையில்
சூலத்தால் குத்திவிட்டானாம்
ராமசாமி குடல் சரிந்துவிட்டதாம்

8 comments:

  1. சூலம் கிண்டலா இருந்தாலும்

    காக்கா உக்காற பனம்பழம் உழுந்த கதையா போச்சே

    ReplyDelete
  2. //வடக்குத்தெரு ராமசாமி// - இது எதோ அந்த கவுண்டமணி செந்தில் காமெடிய உல்டா பண்ண மாதிரி இருக்கு.... வடக்குபட்டி ராமசாமி! நல்ல கிண்டல் வினய்!

    ReplyDelete
  3. வடக்குப்பட்டி ராமசாமியிடம் கடன் வசூலிக்கச் செல்கையில் ரத்த காவு எல்லாம் வாங்குமாம் :)

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க... நாத்திக நக்கல்!

    ReplyDelete