Wednesday, February 24, 2010

கண்டதே காட்சி - விகடன் கவிதை

இந்த வார விகடனில் வெளிவந்த எனது கண்டதே காட்சி எ‌ன்ற கவிதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்...

கண்டதே காட்சி
———————————————
ஒரு குத்துப்பாட்டுக்கும்
ஒரு கல்லூரிப்பாட்டுக்கும்
இடையே ஐந்து நிமிட
விளம்பர இடைவெளி
விளம்பரத்தில்
குளிர் பானம்
ஆயத்த ஆடைகள் விற்கிறார்கள்


ஒரு கல்லூரிப்பாட்டுக்கும்
ஒரு காதல்பாட்டுக்கும்
இடையே ஐந்து நிமிட
விளம்பர இடைவெளி
காண்டோம்,சானிடரி நாப்கின்கள்
விற்கிறார்கள்
சிவப்பழகு கிரீம் விற்கிறார்கள்
புதுமாடல் பைக் விற்கிறார்கள்


ஒரு காதல்பாட்டுக்கும்
ஒரு குடும்பபாட்டுக்கும்
இடையே ஐந்து நிமிட
விளம்பர இடைவெளி
மிருதுவான சப்பாத்தி
கோதுமை மாவு,சமையல் எண்ணெய்


ஒரு குடும்பப்பாட்டுக்கும்
ஒரு தத்துவப்பாட்டுக்கும் இடையே
செய்கூலி சேதாரமற்ற நகைகள்
காப்பீட்டு திட்டம்
ஓய்வூதிய திட்ட விளம்பரங்கள் வருகின்றன


தத்துவப்பாட்டின் இறுதியில்
சீர்காழி மெதுவாக முடிக்கிறார்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா….
தொலைக்காட்சியை அணைத்துவிட்டு
அனைவரும் நிம்மதியாக
உறங்கச் செல்கிறார்கள்


நன்றி
என்.விநாயக முருகன்

11 comments:

  1. அருமை:)! நல்ல கவிதை.

    ReplyDelete
  2. சிறப்பா இருக்கு என்விஎம்

    ReplyDelete
  3. உங்கள் பெயர் பரிச்சயமாயிருந்தும் வலைப்பூவை இன்றுதான் கண்டேன் ! நிரம்பவும் மகிழ்ச்சி !

    ReplyDelete
  4. விநய் எல்லாத்தையும் சொல்லிட்ட..நான் மட்டும் என்னத்த சொல்லபோறேன்//

    சரி ’ஆடன... அடங்கும்..’ஓகே
    ஆடலன்னா???

    ReplyDelete
  5. கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க!

    ReplyDelete
  6. மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. நல்லா இருந்தது விநாயக முருகன்

    நன்றி ஜேகே

    ReplyDelete
  8. ரொம்ப சந்தோசம் வினய். வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நன்றி ராமலக்ஷ்மி
    நன்றி நண்பா
    நன்றி திகழ்
    நன்றி ராஜன்
    நன்றி சென்ஷி
    நன்றி அசோக்
    நன்றி மோகன்
    நன்றி சங்கர்
    நன்றி ஜேகே
    நன்றி உழவன்

    ReplyDelete
  10. மிகவும் ரசிக்கும் வகையில் இருக்கு, வாழ்த்துக்கள்!

    ReplyDelete