Monday, December 19, 2011

ஜப்திக்கு வந்த வீடு

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது

4 comments:

  1. இந்தக் கவிதைக்கு நான் என்னதான் கருத்துக்கள் சொல்லிவிடமுடியும் ?
    ஒவ்வொரு பத்தியிலும் வலி
    கடைசிப் பத்தியில் குதூகலம்
    ( குருவிகளுக்கு வீடு திரும்ப கிடைத்தது போல் அல்லவா )
    அற்புதமான கவிதை.
    -இயற்கைசிவம் வெயில்நதி வலைப்பூ.

    ReplyDelete
  2. நாங்கெல்லாம் 2 வீட்டை ஜப்தி பண்ணவங்க... பின்ன மெட்றாஸ்காரன்னா சும்மாவா...

    ReplyDelete
  3. வலியுள்ள வரிகள்

    ReplyDelete
  4. தோழி வீட்டில் உங்கள் நூல் காண கிடைத்தது ஒவ்வொரு கவிதையும் பல வித உணர்வுகளை உணர செய்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete