Friday, January 15, 2010

ஷேக்ஸ்பியரோடு பயணம்

ஷேக்ஸ்பியரோடு பயணம்
------------------------

நேற்று வளசரவாக்கத்தில்
ஷேக்ஸ்பியரோடு பயணம் செய்தேன்.

17-M பேருந்தில் ஏறி
கலைஞர் கருணா‌‌நி‌தி நகருக்கு
டிக்கட் கேட்டவரை
கே.கே நகரென்று திருத்தினா‌‌‌ர்.

நான் இறங்கும் இடம்
எம்.கே.பி நகர் பக்கத்திலென்று சொன்னார்.
(மகாகவி பாரதியென்று பிற்பாடுதான் தெரிந்தது)

தி.நகரில் தனக்கு
தெரியாத கடைகளே
இல்லையென்று சொன்னார்
டி.டி.கே சாலையின்
மேம்பாலம் பற்றி பேச்சு வந்தது.

பெயரை சுருக்கும்
பண்பாடு பற்றி சீண்டிவிட்டேன்.

ரோஜாவை எப்படி அழைத்தாலென்ன
கோபமாய் கேட்டவர் விடைபெற்றார்.

ஆர்.ஏ.புரத்தில் இறங்கியவரின்
முழுப்பெயரும் நினைவில் இல்லை.
(ஷேக்கென்ற பெயரும் நான் வைத்ததே)

6 comments:

  1. -:) பிடிச்சிருக்கு நண்பா

    ReplyDelete
  2. //ரோஜாவை எப்படி அழைத்தாலென்ன //
    கரெக்ட்

    ReplyDelete
  3. //ஷேக் என்ற பெயரும் நான் வைத்ததே//

    நல்ல சுருக்கம் எம்.வி.மு!

    ReplyDelete
  4. நன்றி மண்குதிரை
    நன்றி அசோக்
    நன்றி கேயார்
    நன்றி ராஜா
    நன்றி மாதவராஜ்
    நன்றி நாணல்

    ReplyDelete