சூஃபி
-------------------------------------
சூஃபி ஞானியொருவர் காட்டில் நடந்தார்.
காட்டில் அசையும் மரத்தை கண்டார்.
மரத்தில் உதிரும் இலையை கண்டார்.
இலையில் வழியும் பனியை கண்டார்.
தாவி குதிக்கும் மானை கண்டார்.
தண்ணீர் அருந்தும் யானையை கண்டார்.
புலி துரத்தும் மானை கண்டார்.
மானை உண்ட புலியை கண்டார்.
எல்லாம் இயற்கை. இயற்கை இயல்பு
சிரித்தபடி சென்றார்.
நடன பெண்கள் அசைவை கண்டோம்
விடலை பசங்க வசனம் கண்டோம்
செத்து மடியும் இனத்தை கண்டோம்
கத்தும் குழந்தைகள் ஓலம் கண்டோம்
மனிதனை மனிதனே உண்ண கண்டோம்
எல்லாம் இயற்கை. இயற்கை இயல்பு
அமைதி காத்தோம். கவிதை எழுதினோம்
நாங்களும் கற்றோம் சூஃபி தத்துவம்
No comments:
Post a Comment