உயிரோசை இதழில் வெளியான எனது "மீன்தொட்டிகள்" கவிதையை வாசிக்க...
மீன்தொட்டிகள்
நான்கு சுவர்களும்
பெல்ஜியம் கண்ணாடி
கீழே போட்டாலும் உடையாது
அடிப்பாகம் இரண்டங்குலம்
தடிமன் இந்தத் தொட்டியில்
காற்றுப் புக வெளிவர
இந்த வெண்டிலேட்டர்.
மேலே சின்னதாக
ரேடியம் விளக்கு
இரை போட
இலகுவான வழி
மீன்கள் வளர்க்க
உகந்த தொட்டி என்றான்
எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத்தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது.
நன்றி...!
-என்.விநாயக முருகன்
No comments:
Post a Comment