Sunday, May 2, 2010

அட..ங்கொய்யால

நூறுகோடிக்கு குறைவான
ஊழல்களில் சுவாரசியமில்லையாம்
எந்த தொலைக்காட்சியும்
கண்டுக்கொள்வதில்லை


மூன்று கொலைகள் செய்தால்
மட்டுமே
முத‌ல் பக்கத்தில் பிரசுரமாம்
வண்ண புகைப்படம் வர
நான்கு கொலைகளாம்


சிவனே வந்தாலும்
சின்ன வீட்டுடன்
கையும் களவுமாய்
பிடிபடாதவரை
பிரபலமில்லையாம்


நாயே ஆனா‌‌‌லும் சரி
பேயே வந்தாலும் சரி
மனிதனை கடித்தால் செய்தியில்லையாம்


நடுவானில் வெடிக்க வேண்டும்
தலை துண்டிக்கப்பட வேண்டும்
கதற கதற ஓட ஓட
எல்லாமே எங்களுக்கு
சுட சுட வேண்டும்
ஆறாத வரை புதுக்கஞ்சிதான்


அப்ப கஞ்சிக்கு செத்தவன்?
அட..ங்கொய்யால
இதென்ன வெட்டிப்பேச்சு
அவனை பத்தி

10 comments:

  1. உள்ளுரிலிருந்து உலகவங்கி வரை
    சுருட்டுறதுக்கு
    கஞ்சிக்கு செத்தவனின் கணக்கு மட்டும்

    ReplyDelete
  2. :)))))
    ரொம்ப நல்லாயிருக்கு வினய்.

    ReplyDelete
  3. என்ன இப்படி கிளம்பிட்டீங்க பாரதி?

    டீ சாப்பிடுறீங்களா? :-)

    ஜோதி வேற.. ;-)

    ReplyDelete
  4. பா.ராஜாராம் said...
    என்ன இப்படி கிளம்பிட்டீங்க பாரதி?

    டீ சாப்பிடுறீங்களா? :-)

    கடவுள் சுடுதண்ணீ ஊத்த மாட்டார்னா நானும் வர்றேன்

    ReplyDelete
  5. முதல் நாலு

    :)!

    மீதம்

    :(!

    நல்ல கவிதை!!

    ReplyDelete
  6. நிதர்சனங்களை படமாக்கிவிட்டீர்கள்.......

    ReplyDelete
  7. அப்பிடிப் போட்டுத் தாக்குங்க.

    ReplyDelete
  8. நீங்க சொன்னமாதிரி அதெல்லாம் வெட்டிப் பேச்சாகத்தான் ஆகிப்போனது.

    ReplyDelete
  9. நிதர்சனங்களை படமாக்கிவிட்டீர்கள்......

    ReplyDelete
  10. நன்றி ஜோதி
    நன்றி முத்துவேல்
    நன்றி பா.ரா
    நன்றி ராமலக்ஷ்மி
    நன்றி ஆரூரன் விசுவநாதன்
    நன்றி சரவணக்குமார்
    நன்றி உழவன்
    நன்றி கமலேஷ்

    ReplyDelete