Saturday, May 8, 2010

ஊர்க்கோல வாழ்வை நச்சி

இந்த ஊரில் இறந்துப்போவதில்
புண்ணியம் பலவுண்டாம்
கூடத்தில் படுக்கவைத்து
திண்ணையில் விடியவிடிய
பேசிக்கொண்டிருக்க மாட்டார்களாம்


மின்சார சுடுகாடெல்லாம்
கணினி மயமாம்
அஞ்சே நிமிடத்தில்
காரியம் முடித்து
பார்சலும் கொடுப்பார்களாம்


அர்த்தஜாமத்தில் எழுந்தமர்ந்து
அடிவாங்க தேவையிருக்காதாம்
அன்பாகவே கவனிப்புண்டாம்
உடன் வந்தவர்களை
உபசரிக்க ஊழியர்களுமுண்டாம்


எனது கவலையெல்லாம்
நான் செல்லும் அமரர் ஊர்தி
போக்குவரத்து நெரிசலில்
மாட்டக் கூடாதென்பதில்தான்
இன்னொருமுறை சாக தயாரில்லை நான்


அடுத்த கவலை எனது
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
யாரும் சிறுநீர் அடித்துவிடக்கூடாதென்பதில்

11 comments:

  1. இந்த சின்ன வயசுல என்ன இது மாதிரி யோசிக்கிறீங்க...?

    ஒரு நல்ல டான்ஸ் பாரு இல்லயேன்னு வருத்தப்படலாம்... அடுத்த ஜென்மத்துல நாமெல்லாம் ஒரு France, Brazil ன்னு பொறக்கனும்..வேண்டிக்குங்க... ம்ஹும்..

    மத்தபடி சிறுகதை நல்லாவேயிருந்தது :))

    ReplyDelete
  2. :-))

    நல்லாருக்குன்னு பின்னூட்டம் போடணுமா?நல்லாருங்கன்னு போடணுமான்னு குழப்பமா இருக்கு.

    //அடுத்த ஜென்மத்துல நாமெல்லாம் ஒரு France, Brazil ன்னு பொறக்கனும்..வேண்டிக்குங்க... ம்ஹும்//

    நீங்க ரெண்டு பேரும் சவுதியில பிறக்க-நான் வேண்டியிருக்கிறேன். :-)

    இன்ஷா-அல்லாஹ்!

    ReplyDelete
  3. அப்போ அடுத்த ஜென்மத்தல சவுதிய மாத்திடுவோம்... சித்தப்ஸ்

    இன்ஷா-அல்லாஹ்!

    ReplyDelete
  4. நல்லா இருக்கு நண்பரே...

    ReplyDelete
  5. கவிதை நன்று.

    ReplyDelete
  6. வணக்கம், இப்போவெல்லாம் சிலர் எழுதுற கவிதய படிச்சா கண்ணகட்டி காட்டுலவிட்ட மாதிரியிருக்கும், ஆனா உங்க கவிதை வேற ரகம். படிக்கவே பயமாயிருக்கு!, எக்ஸ்ட்ரீம் சிந்தனை... ஆனாலும் யோசிக்கவைக்கும் சிந்தனை.

    ReplyDelete
  7. கவிதை நல்லாயிருக்கு விநாயகமுருகன்.

    ReplyDelete
  8. கடைசி ரெண்டு பத்தியும் செமயா இருக்கு நண்பா

    ReplyDelete
  9. நன்றி அசோக்
    நன்றி பா.ரா
    நன்றி கமலேஷ்
    நன்றி மயில்ராவணன்
    நன்றி மணி
    நன்றி வேடியப்பன்
    நன்றி சுந்தர்
    நன்றி ரவிசங்கர்

    ReplyDelete