Tuesday, May 25, 2010

இரண்டு கவிதைகள் - உயிரோசை & கீற்று.காம்

கவிதைகளை வெளியிட்ட உயிரோசை மற்றும் கீற்று.காம் மின்னிதழ்களுக்கு நன்றி

போன்சாய் மரம்- சில ஆலோசனைகள்
போன்சாய் மரங்களை
வளர்ப்பது சாதாரண விஷயமல்ல
வெயிலில் அதிகநேரம்
வாடவிடக்கூடாது.
வாரத்திற்கு ஒருமுறை
இலைகளைக் கிள்ளி
தண்டுகளைக் கட்டி
பிள்ளைகள் போல
பராமரிக்க வேண்டும்

தண்ணீரை ஊற்றக்கூடாது
தெய்வத்தின் மீது
தூவும் மலர்களைப் போல
தெளிக்க வேண்டும்
குறிப்பாக
பூச்சிகளை அண்டவிடக்கூடாது

போன்சாய் மரங்களை
உயரமாய் வளரவிடக்கூடாது
பக்கவாட்டில் கிளைபரப்பினாலும்
பிரச்சினைதான்
கறாராக வெட்டிவிடவும்

போன்சாய் மரங்களுக்கு
தாய்மண் இருந்ததில்லை
தாய்மண்ணுக்குக் குரல்கொடுக்கும்
போன்சாய் மரங்கள்
அதிகநாள் இருந்ததில்லை
அவற்றை மட்டும்
வளர்க்கவே வளர்க்காதீர்



என்ன செய்யலாம்?

ஓர் இனம் அழிக்கப்படும்போது
நாம் செய்ய வேண்டிய
‌சில கடமைகள் உள்ளன

ஷெல்லடிகளின் சத்தம்
செவிகளில் விழாமலிருக்க
தொலைக்காட்சிப் பாடலின்
ஒலியளவை அதிகரிக்கலாம்

செய்தித்தாள்களில் வரும்
சினிமா பக்கங்களை தவிர
எஞ்சியவற்றை கிழித்து விடலாம்

சில அறிக்கைகள் விடலாம்
‌சில கணக்குகளை போடலாம்
‌சில எதிரிகளை திட்டலாம்
‌சில துரோகிகளை சபிக்கலாம்

ஆத்திரப்படலாம்
எரித்துக் கொள்ளலாம்
அடித்துக் கொள்ளலாம்

விதியெனலாம்
மதிகெட்டவர்களெனலாம்

தப்பி பிழைத்தவர்களின்
கண்ணீரை கேட்டுவைக்கலாம்
பிறகொரு நாளில்
நிதானமாக
நாலுவரி கவிதையெழுதலாம்


நன்றி
-என்.விநாயக முருகன்

12 comments:

  1. கவிதை
    மிகவும் அருமை

    ReplyDelete
  2. கவிதைகள் நன்றாயிருக்கின்றன.

    ReplyDelete
  3. நல்ல கவிதைகள் வினாயக முருகன்.

    ReplyDelete
  4. //போன்சாய் மரங்களுக்கு
    தாய்மண் இருந்ததில்லை
    தாய்மண்ணுக்குக் குரல்கொடுக்கும்
    போன்சாய் மரங்கள்
    அதிகநாள் இருந்ததில்லை
    அவற்றை மட்டும்
    வளர்க்கவே வளர்க்காதீர்//
    இந்த பத்தியே போதுமென நினைக்கிறேன்... இரண்டுக்கும் சேர்த்து... :)

    ReplyDelete
  5. இரண்டுமே அருமை நண்பா

    ReplyDelete
  6. விநய்,
    இரண்டு கவிதைகளையும் ஏற்கனவே வாசித்தேன்.
    இரண்டாவது கவிதை மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. IPL match பார்க்கலாம்
    அல்லது டெல்லிக்கு கடிதம் எழுதலாம்.

    ReplyDelete
  8. //ஓர் இனம் அழிக்கப்படும்போது
    நாம் செய்ய வேண்டிய
    ‌சில கடமைகள் //

    IPL match பார்க்கலாம்
    அல்லது டெல்லிக்கு கடிதம் எழுதலாம்

    ReplyDelete
  9. கவிதைகள் அருமை..ஆனா நன்னா புரியறதே..புரியாம சில பூடகமான சொற்களை கட்டமைப்பதைத் தானே கவிதையென்று சொல்வார்கள்!!!!.

    ReplyDelete
  10. இரண்டு கவிதைகளுமே மிகவும் அருமையான கவிதைகள் நண்பரே...இரண்டாவது மிக மிக அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள், தொடருங்கள்...

    ReplyDelete
  11. விநய்,
    இரண்டாம் கவிதைக்கு சில துளிகள்
    ஏதாவதொரு நடிகையை நடனமாட சொல்லலாம் ...

    ReplyDelete
  12. நன்றி கலாநேசன்
    நன்றி சுந்தர்
    நன்றி ஜெகதீசன்
    நன்றி அஷோக்
    நன்றி நண்பா
    நன்றி வாசு
    நன்றி நளினி சங்கர்
    நன்றி சிவா
    நன்றி கமலேஷ்
    நன்றி ரவிசங்கர்

    ReplyDelete