இறப்பொக்கும் எல்லா உயிரும்
இறந்த பின்னர்
ஏது ஊரே.ஏ...ஏ...ஏ
யாவரும் சவங்கள்
உண்பது வரிசை
உடுப்பது கிழிசல்
உறைவிடமெங்கே முள்வேலி
செத்துப் பிழைத்தோ...தோ...தோம்
பிழைத்தும் சாவோம்...வோ...வோ...வோம்
தீதும் சூதும்
பிறர் தர வாழு எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
சிறு குழந்தை முதல்
பேரிளம் பெண்களும் வரையிலே
உடம்பினை புணர்ந்து
கூறுபோடும்
விகாரைகள், மகா வம்சங்கள்
முள்வேலிக்குள் நீளும் கைகள்
ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும்,
பசிக்கின்ற வயிறுகளும்,
மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழி. செம்மொழி
தமிழ்மொழி தமிழ்மொழி அ..அ..ஆ...ஆ..ஆ...
குட்டிமணி முதல்
முத்துக்குமார் வரை
செத்துப் போனவர்
எத்தனையோ எத்தனையோ
ஓ...ஓ...ஓ...ஓ
ஓ...ஓ...ஓ...ஓ
இரண்டு லட்சம் பேர்
குருதியில் சிவந்த மொழி
எங்கள் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான
தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
விநாயக முருகன் பின்னிடீங்க .. பாராட்டுக்கள் ..
ReplyDeleteகண்டன கவிதை!
ReplyDeleteஉணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDeleteவலிக்கிறது..
ReplyDelete:(
நியாமான கேள்விதான்..நண்பரே..
ReplyDeleteமொழி அரசியலை சுட்டெரிக்கும் ஒரு கவிதை...வெந்தணலாய் பலர் மனதில் கொழுந்த தீ, வார்த்தைகளாய் வெளிவந்தது...விநாயகனின் பொறுமை எண்ணத்தில்...முருகனின் வேகம் எழுத்து வண்ணத்தில்... வாழ்க உன் தமிழ்.
ReplyDeleteவாவ்
ReplyDelete"குருதியில் சிவந்த மொழி
ReplyDeleteஎங்கள் மொழி தமிழ் மொழியாம்"
காரணப்பெயர்,,,
இவர்களை செறுப்பால் அடித்தால் கூட நம் வலி குறையாது. அதைவிட மேலான ஒரு ஆயுதத்தால் அடித்த திருப்தியினை எனக்கு ஏற்படுத்தியிருக்கின்றது உங்கள் கவிதை. உங்கள் வலைப்பூவின் முகப்பில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எறும்பின் முயற்சியாகவே இந்த கவிதையை நான் கருதுகிறேன். இன்னும் எறும்புகள் தேவை. குறைந்தபட்சம் இவர்கள் சுரணையுடன்தான் உள்ளார்கள் என்பதையாவது உறுதி செய்ய...
ReplyDeleteஅவர்களின் (செம்மொழி தமிழர்களின்) பாடலையே நீங்கள் தேர்ந்தெடுத்து இருப்பது அருமை
ReplyDeleteஆமாம், சரிதான். கவிதை ஆறுதலளிக்கிறது.
ReplyDeleteஉணர்வுக்கு நன்றிங்க... பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிதை அதிரடி!.... சிலருக்கு நெத்தியடி!!
ReplyDelete//நளினி சங்கர் said...
ReplyDeleteஇவர்களை செறுப்பால் அடித்தால் கூட நம் வலி குறையாது. அதைவிட மேலான ஒரு ஆயுதத்தால் அடித்த திருப்தியினை எனக்கு ஏற்படுத்தியிருக்கின்றது உங்கள் கவிதை. உங்கள் வலைப்பூவின் முகப்பில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எறும்பின் முயற்சியாகவே இந்த கவிதையை நான் கருதுகிறேன். இன்னும் எறும்புகள் தேவை. குறைந்தபட்சம் இவர்கள் சுரணையுடன்தான் உள்ளார்கள் என்பதையாவது உறுதி செய்ய... //
ஆமோதிக்கிறேன் நண்பரே !!
போட்டு தாக்குங்க ...:)
“இறப்பொக்கும் எல்லா உயிரும்
ReplyDeleteஇறந்த பின்னர்
ஏது ஊரே.ஏ...ஏ...ஏ
யாவரும் சவங்கள்
உண்பது வரிசை
உடுப்பது கிழிசல்
உறைவிடமெங்கே முள்வேலி”
மிகப்பெரிய உண்மையை-வலியை ஒரு தத்துவம் போல அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.