“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…
ஞானக்கூத்தன் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை. ஞானக்கூத்தனின் பல கவிதைகள் எனக்கு பிடிக்கும். எங்க ஊர் (கும்பகோணம்) பக்கம் ஊமை குசும்புனு ஒரு வார்த்தை உண்டு.
செம்மொழி மாநாடு பற்றி கோவை பொதுமக்களிடம் பேட்டி எடுத்து நேற்று தொலைக்காட்சி செய்திகளில் காட்டினார்கள். அதில் ஒரு பெண்மணி செமொளி தமிளுக்கு தலீவர் செஞ்சிருக்க விசயத்தை பாராட்டாம இருக்கமுடியாது. கோயம்புத்தூர் சிட்டியே பிரைட்டா இருக்கு என்றார்.
//கோயம்புத்தூர் சிட்டியே பிரைட்டா இருக்கு என்றார்.//
ReplyDelete:-))