
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்
சமீபத்தில் ஒரு நாவல் படித்தேன். உலுக்கி எடுத்து விட்டது. வா.மு.கோமுவின் சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்.
நாவலின் முற்பகுதியில் கல்யாண்ஜி கவிதை வரிகள் போல கவித்துவம் தொக்கி நிற்கிறது.நாவல் படிக்க,படிக்க கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏறுகிறது. நாவலின் இரண்டாம்பகுதியில் உண்மையான வாழ்க்கை காட்டப்படுகிறது. திடீரென கல்யாண்ஜி காணாமல் போய் கலாப்ரியா கவிதைகள் வரிகள் போல வாழ்க்கையின் கவுச்சியும்,வலியும் உக்கிரமாக தாக்குகிறது.
விதவிதமான பெண்ணுடல்கள் அவர்கள் எதிர்கொள்ளும் வலிகள் பெண்ணுடல்கள் மீது அவிழ்த்துவிடப்படும் கட்டற்ற வன்முறை எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளார். சிலர் முகம் சுழிக்கலாம். சிலர் மூக்கை பொத்தலாம். சமூகத்தில் இதெல்லாம் நடக்கவே இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
ஜி.நாகராஜன் உலகில் வரும் பெண்களின் வாழ்வு, அக நெருக்கடிகள், வாழக்கை சிக்கல்கள் மிக மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். வா.மு.கோவிடம் இந்த நுட்ப பதிவு மட்டும் மிஸ்ஸிங் என்று தோன்றுகிறது. சில காதல் (!?) கதைகள் மேலோட்டமாக தினந்தந்தி கள்ளக்காதல் செய்திகள் போல மட்டும் வந்து ஒட்டாமல் போகிறது. உதாரணம் எங்கள் ஊரில் பிட்டு படம் ஓட்டும் தியேட்டர்களின் கழிப்பறைகளில் திருநங்கைகள் வாய்போட்டு விடுவார்கள். மெரினா பீச்சிலும் சென்னையில் சில கட்டண கழிப்பறைகளிலும் இது போன்ற விஷயங்களை பார்த்துள்ளேன். வா.மு.கோமு இதை பதிவு செய்துள்ளார். அதேநேரம் அந்த திருநங்கைகள் எதிர்கொள்ளும் புற உலகின் நெருக்கடிகள், அகசிக்கல்கள் மிஸ்ஸிங். நவீன உலகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பான இந்த செல்போன் பலருக்கு சுயஇன்ப வடிகலாக இருக்கிறது. இதை அழகாக பதிவு செய்துள்ளார். ஆனால் இதுவே ஒரு கட்டத்தில் ஓவராகி சாருவின் ராஸலீலா நாவல் நினைவுக்கு வருகிறது.
இந்த நாவல் பற்றி சில வலைப்பூக்களில் இதையெல்லாமா போய் எழுதனும்? என்று சமூக அக்கறையுடன் எழுதியிருந்தார்கள்.
அவர்களுக்கு இந்த வரிகள்....
''நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் 'இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது' என்று வேண்டுமானால் கேளுங்கள். ''இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?'' என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்''
குறத்தி முடுக்கு நாவலில் ஜி.நாகராஜன்
எனது வருத்தமும் இதுவே. இன்னும் கொஞ்சம் முழுமைப் படுத்தியிருக்கலாம். வா.மு.கோமு நாற்பதே நாட்களில் இந்த நாவலை எழுதியிருந்ததாக முன்னுரையில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல அலசல்.. கைகொடுங்க :)
ReplyDeleteநானும் படித்துவிட்டேன். நாவல் இன்னும் சுருக்கியிருக்கலாம் என்பது என் கருத்து. வாமுகோமு அவர்களை நேரில் சந்தித்தபோது இதையே சொல்லியிருந்தேன். பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த நாவல் எனக்குப் பிடிக்கவேயில்லை. இதுறித்து ஏற்கனவே எனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். எந்த சீரியஸ்னஸும் இல்லாமல் அமெச்சூர்த்தனமாக எழுதப்பட்டு இருக்கிறது. மூக்கை, வாயைப் பொத்தாமல், எல்லாவற்றையும் திறந்து வைத்தே இதனைச் சொல்கிறேன்.
ReplyDeleteநானும் படிச்சுட்டேன். நாவல் வாழ்க்கையைச் சொல்லியிருக்கு.சில இடங்களில் இதெல்லாம் சொல்லனுமா(Phone sex matters) என்று நானும் நினைத்தேன்.ஆனால் இதை கோமு பதிவு செய்யலேன்னா யாரு செய்வார்கள்? எல்லாத்துலயும் சீரியஸ்னஸ் தேடும் அறிவுஜீவிகள் இருக்கும் வரை பாலியல் இலக்கியம் தமிழில் வளர்ச்சி பெறாது. எனக்கென்னவோ யாரோ சொன்ன ”தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்” ன்ற பழமொழிதான் நினைவுக்கு வருது.
ReplyDeletesenthil Tiruppur
இவ்வளவு சீக்கிரம் படித்துவிட்டீர்களா.. மகிழ்ச்சி.
ReplyDeleteநான் கொஞ்சம்தான் படிச்சேன். படிக்கனும் :-)
http://vaamukomu.blogspot.com
ReplyDeleteநன்றிகளுடன் வாமுகோமு.
பகிர்விற்கு நன்றி தல!
ReplyDelete