Monday, April 5, 2010

"சிதைவுகள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த சிதைவுகள் எ‌ன்ற கவிதையை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி.


இந்தியத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக நேற்று
ஒரு கொலையைக் காட்டினார்கள்
முக்கியகட்டத்தில்
விளம்பர இடைவேளை
வ‌ந்து தொலைத்துவிட்டது!


கூண்டுக்கிளியின் கனவில் வரும்
இன்னொரு கிளியும்
கூண்டில்தான் இருக்கிறது!


மனைவிதான் தனக்கு உயிரென்று
சொன்னவன் வீட்டில்
திருட்டுத்தனமாக நுழைகிறான்
உயிர்கொடுப்பான் தோழன்!


மீன்தொட்டிகள் இருக்கும் வீட்டில்
பூனைக்கும் காவல் மீனுக்கும் காவல்!

சாமியார்களைக்கூட
அடிக்கடி டி.வி.யில் பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
சாமியைப் பார்த்து!
(நன்றி - கல்யாண்ஜி)


தரிசல் நிலத்திலும்
முப்போகம் விளைகின்றன
செல்போன் டவர்கள்!


நேற்று ஒருவர்
மிஸ்டுகால் தந்து அழைத்தார்
பதறிப்போய் தொடர்புகொண்டேன்
அவரது அம்மா இறந்துவிட்டாளாம்!



-நன்றி
என்.விநாயக முருகன்

4 comments:

  1. //கூண்டுக்கிளியின் கனவில் வரும்
    இன்னொரு கிளியும்
    கூண்டில்தான் இருக்கிறது!//

    //நேற்று ஒருவர்
    மிஸ்டுகால் தந்து அழைத்தார்
    பதறிப்போய் தொடர்புகொண்டேன்
    அவரது அம்மா இறந்துவிட்டாளாம்!//

    உங்களை யோவ் என்று கூப்பிட விரும்புகிறேன்.நீங்கள் டேய் என கூப்பிட அனுமதிக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. //கூண்டுக்கிளியின் கனவில் வரும்
    இன்னொரு கிளியும்
    கூண்டில்தான் இருக்கிறது!//

    அருமை விநாயகமுருகன் ...

    நன்றி ஜேகே

    ReplyDelete
  3. நிறைய விஷயங்களைத் தொட்டுச்செல்கிறது கவிதை.. மகிழ்ச்சி. வாழ்த்துகள் விநய்

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க சில குட்டிக் கவிதைகள்.

    ReplyDelete