ஒவ்வொரு கோப்பை
ஒயின் பின்னாலும்
ச்சீ.. ச்சீ.. இது புளிக்கும்
நரியொன்று விட்டுச்சென்ற
நிராகரிப்பு
பொம்மைக்கடையில்
அழுகிறது குழந்தை
அடம்பிடித்தபடி
சிரிக்கிறார் புத்தர்
கண்ணாடி முன்பு
நான் சிரிக்கிறேன்
அவனும் சிரிக்கிறான்
நான் அழுகிறேன்
அவனும் அழுகிறான்
சலித்துப்போய் திரும்ப
அவனும் கிளம்பியிருந்தான்
எனக்கு
யாருமில்லை
டீ
கூட
நேற்றுதான்
தெரிந்தது
தேநீர்க்கடையில்
(நன்றி நகுலனுக்கு)
தியானத்தில் அமர்ந்தேன்
முடிவில்
எறும்பு ஊரும் பேரிரைச்சல்
-நன்றி
என்.விநாயக முருகன்
ok... பரவாயில்ல... :))
ReplyDeleteஎன்ன தலைவரே
ReplyDeleteசங்க மேட்டருக்கு பிறகு ஆளே அட்ரஸ் காணோம்?
நான் காலேஜ் முடிச்சுட்டு ஒன்னாந்தேதில இருந்து வேலைக்கு போயிட்டேன்...அதான் காரனம்
ReplyDeleteநீரும் நம்ம ப்ளாகுக்கு வர்றதுயில்லன்றதும் புரியுது
அப்புறம் நல்லாயிருந்தான் கமெண்டு :)... இல்லன்னா BYPASS தான் :))
ReplyDeleteஹிஹி.. நல்லாயிருந்தா தான் (spelling mistakeu)
ReplyDelete2வது குறிப்பு பிடிச்சிருக்கு
ReplyDelete//தியானத்தில் அமர்ந்தேன்
முடிவில்
எறும்பு ஊரும் பேரிரைச்சல்//
எறும்பு ஊருகிற இரைச்சலா கேட்குறவு அளவு
தியானத்தில் மூழ்கிறீங்களா ??
joke apart நல்லாருக்கு தலைவரே
எறும்பு படைகளின்
அணிவகுப்பில் முரிந்த தியானம்
குழந்தையின் சிரிப்பில் நிறைவுற்றது.
ஒரே மாதிரி பின்னூட்டம் போட வசதி குறைச்சலாய் இருக்கு.
ReplyDeleteநூறு வயசுக்கு நல்லா இருங்க,முப்பத்தி மூணு விநாயகம் (அ) தோழர். :-) (யோவ்..)
இடையில் நெருப்பில் குளிக்க சொல்கிற மாது வேற...
வாழ்த்துகள் :-)
ReplyDeleteநன்றியும் வாழ்த்துக்களும் அசோக். டூட்டிதான் பர்ஸ்ட். லூட்டி நெக்ஸ்ட்
ReplyDeleteநன்றி ஜோதி.அதே
நன்றி பா.ரா. நூறெல்லாம் வேண்டாங்க. பின்னால க்யூவுல நிக்கறாங்க.
நன்றி உழவன்