Friday, June 4, 2010

பூஜ்யங்கள் - விகடன் கவிதை

இந்த வார விகடனில் வெளிவந்த எனது கவிதை.
(நன்றி ஆனந்தவிகடன்)

பூஜ்யங்கள்
---------
ஆறாவது வகுப்பு
ஈ பிரிவில் மறக்கமுடியாதவன்
வே. அரங்கநாயகம்
வருடத்துக்கு நாலு முறை
கணக்குப் பாடத்தில்
முட்டை எடுப்பான்


ஒரு தேர்வில்
பத்தோடு பத்தை பெருக்கி
பத்துக்கு பிறகு
பத்து பூஜ்யங்களை போட்டது
உலக பிரசித்தம்
வாத்தியார் வெங்கடரமணி
அதை சுழித்து
பத்து முட்டைகள் போட்டது
கூடுதல் சுவாரஸ்யம்


கோழிப்பண்ணை வைக்கலாம்டா
கிண்டலடித்தலும் வையமாட்டான்
பூஜ்யங்களுக்கு மதிப்புள்ளன
புன்னகையோடு சொல்வான் முரடன்


பத்தாம் வகுப்பில்
பாதியை தாண்டாத
அரங்கநாயம் போட்டோவை
வெகுநாட்களுக்கு பிறகு
செய்தித்தாள்களில் பார்க்க நேரிட்டது
மத்திய அமைச்சராம்
ஆயிரம் கோடி ஊழலாம்
சட்டென எண்ண வரவில்லை
எத்தனை பூஜ்யங்கள்?

நன்றி
-விநாயக முருகன்

16 comments:

  1. மிகவும் ரசித்து படித்தேன், ஆனந்த விகடனிலும் ... இப்பொழுதுதான் உங்கள் வலைப்புக்கத்திற்கு வருகிறேன். இனி அடிக்கடி வருவேன். தொடர்வோம்...

    ReplyDelete
  2. ithu kavithi eluthuiya ungalakum, veliyitta ananda vikatanukum oru kuttu. but any how, vasikka nalla irruku.

    ReplyDelete
  3. ̓¾¡ º¡÷ ¯Â¢Õ¼ý þÕó¾¡ø þ¨¾ ¸Å¢¨¾ ±ýÚ ¦º¡øÄ£Õì¸ Á¡ð¼¡÷.
    ±ôÀʧ¡ ¯í¸ À¨¼ôÒ Å¡º¢ì¸ ¿øÄ¡ÕìÌ

    ReplyDelete
  4. Nalla siru kathaiyai kavithai endru thavarga veliyittu vittargal ananda vikatan

    ReplyDelete
  5. 'பூஜ்ஜியங்களுக்கு மதிப்புள்ளன'
    தெரிந்து கொண்ட அரங்கநாயம்
    இப்போது அமைச்சர்.
    தெரிந்து கொள்ளாத நீங்கள் கவிஞர்.

    ReplyDelete
  6. :-))

    ரொம்ப நல்லா இருக்கு விநாயகம்.

    ReplyDelete
  7. பூச்சியம் பற்றி எழுதி நூறு மார்க் வாங்கிடீங்க.
    அருமை.

    ReplyDelete
  8. ஹா ஹா.. அருமை விநய்.
    இபோதெல்லாம் சில்லறைத் தனங்கள் பண்ணுவதில்லையாம் என்ற உங்களிம் இன்னொரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது..

    ReplyDelete
  9. அருமை விநய்


    நன்றி ஜேகே

    ReplyDelete
  10. நன்றி கிரி
    நன்றி அன்புமணி
    நன்றி சிவா
    நன்றி டாக்டர் அசோக்
    நன்றி ரவிசங்கர்
    நன்றி செ.சரவணக்குமார்
    நன்றி நளினி சங்கர்
    நன்றி பா.ரா
    நன்றி மால்குடி
    நன்றி திகழ்
    நன்றி நண்பரே
    நன்றி ஜேகே

    ReplyDelete
  11. மொதல்லயே சொல்லிட்டன்ய்ங்களா?

    ReplyDelete