Friday, September 10, 2010

ஸ்பென்சர் பிளாசாவில் காந்தி










நேற்று
ஸ்பென்சர் பிளாசாவில்
காந்தியை சந்தித்தேன்
அடையாளம் தெரியவில்லை
ஆள் சற்று சதைப்போட்டிருந்தார்.
கைத்தடியை காணவில்லை.
மூக்குக்கண்ணாடிக்கு பதில்
ரேபான் கிளாஸ் இருந்தது.
கதர்வேட்டி இருந்த இடத்தில்
லீ ஜீன்ஸ்(நீலநிறம்) இருந்தது.
காதில் ப்ளூடூத் இருந்தது
கையில் நோக்கியா மொபைல் இருந்தது

நீ..நீங்க காந்திதானே
கேட்ட என்னை
புன்னகையோடு பார்த்து
ஐ'யாம் மிஸ்டர் கேண்டி சொன்னார்

மிஸ்டர் கேண்டியும்,நானும்
நந்திகிராமம் முதல்
தண்டகாரண்யம் வரை பேசிக்கொண்டோம்
நமீதா முத‌ல்
நயன்தாரா வரை
மிஸ்டர் கேண்டிக்கு தெரிந்திருந்தது
ஆயிரம் கோடி ஊழலை
ஆச்சர்யப்படாமல் கேட்டுக்கொண்டார்

எந்திரன் பட வெளியீடு
தள்ளிப்போவதை சொல்லி
கவலைப்பட்டார்
சுதந்திரதினத்துக்கு
தொலைக்காட்சியில்
என்ன பட்டிமன்றம்
ஆர்வத்தோடு கேட்டார்

ஆட்டுப்பால் வேர்க்கடலையை விட
கோக்கும் பீட்சாவும்
உடலுக்கு உகந்ததென்றார்

மிஸ்டர் கேண்டியிடம்
ஆட்டோகிராப் வாங்க
அவசரத்துக்கு எதுவும் கிடைக்காமல்
ஐநூறு ரூபாய் தாளை தந்தேன்
ரூபாய் நோட்டை பார்த்த
மிஸ்டர் கேண்டி
முன்னிலும் அதிகமாய்
பொக்கைவாய் தெரிய
புன்னகைத்தார் நட்பாய்

8 comments:

  1. சிரிக்க வெச்சே கொல்றீங்க .. அருமைங்க...

    ReplyDelete
  2. அவரது இடுப்பில் தொங்கிக்கொண்டு இருக்கும் வாட்சை செல்போனை வைக்க மறந்துவிட்டீர்களோ?

    காந்தி நிறைய சொல்கிறார். :-))))

    ReplyDelete
  3. நம் சந்திப்பை பற்றி எழுதியதற்க்கு மிகவும் நன்னி :)

    ReplyDelete
  4. நன்றி இராமசாமி கண்ணண்
    நன்றி மாதவராஜ்
    நன்றி ஜமால்
    நன்றி வசந்த்
    நன்றி சக்தி
    நன்றி அசோக்

    ReplyDelete