Thursday, September 8, 2011

குஞ்சுண்ணியும்,காந்தியும்

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்தானே

எழு‌தி எழு‌தியே
எழுத்தாய் போனவர்

குஞ்சுண்ணி
எதைப் பற்றியும் எழுதுவார்
எல்லார் பற்றியும் பேசுவார்
எல்லாமும் விவாதிப்பார்

குஞ்சுண்ணி
ஒருநாள் தேநீர் கடைக்கு செ‌ன்றார்

தேநீர் அருந்தியபடியே
தினத்தந்தி பேப்பரை
மெதுவாக படித்தார்

என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?
குஞ்சுண்ணிக்கு அதிர்ச்சி
கோபத்தில் பேப்பரை கசக்கி எறிந்தார்
அடக்கடவுளே வடைபோச்சே..

வீட்டுக்கு வந்ததும்
காந்தியை பற்றி தேட ஆரம்பித்தார்

காந்தி பிறந்த இடத்துக்கு செ‌ன்றார்

சபர்மதி ஆசிரம் செ‌ன்று
காந்தி சிலையை வணங்கினா‌‌‌ர்

ஹேராம் படத்தை
டிவிடியில் பார்த்தார்

காந்திக்கு குல்லா தைத்து கொடுத்த
சுலைமான் சேட்டிடம் பேட்டி எடுத்தார்

மூச்சுக்கு நூறுமுறை
காந்தி காந்தி எ‌ன்றர்

மனைவி சாந்தியை கூட
காந்தி எ‌ன்று விளித்தார்

பூந்தி தட்டை பார்த்தாலும்
காந்தி காந்தியென்று உருகினா‌‌‌ர்

ஊண் உருகி
உள்ளொளி பெருகி
காந்தியாகவே மாறினா‌‌‌ர்

காந்தியை பற்றி
கவிதை எழுத ஆரம்பித்தார்

காந்தியை பற்றி
கட்டுரைகள் எழுதி குவி்த்தார்

காந்தி கிராமத்திற்கு
கால்நடையாகவே செ‌ன்றார்

காந்திக்கே தெரியாத
பல விஷயங்களை
கண்டுபிடித்து எழுதினார்

காந்தி குளித்தது
காந்தி பல்விளக்கியது
காந்தி கிரிக்கெட் ‌விளையாடியது
இன்னும் பல பல

குஞ்சுண்ணி
ஒரு சுபயோக சுபதினத்தன்று
தனது எழுத்துகளையெல்லாம்
திரட்டி நூலாக வெளியிட்டார்

ஆயிரம் பிரதிகளில்
காந்தி சிரித்தாலும்
ஆத்ம திருப்தி வரவில்லை
குஞ்சுண்ணிக்கு

ஒரு யோசனை பிறந்தது
ஒரு காந்தி எடுத்தால்
இன்னொரு காந்தி இலவசமென்று
ஆரம்பித்தார்

ஒரு புத்தகம் ஐநூறு ரூபாய்
எ‌ன்று விற்க ஆரம்பித்தார்
ஐந்து நூறுரூபாய்
பத்து ஐம்பதுரூபாய்
ஐநூறு பத்துரூபாய்

குஞ்சுண்ணிக்கு வீடெங்கும்
காந்தி கொள்கைகள்
பத்தாய் நூறாய்
ஐநூறாய் ஆயிரமாய்

குஞ்சுண்ணி
காந்தியை போன்று சிரிக்கிறார்ர்
காந்தியை போன்று உண்கிறார்
காந்தியை போன்று நடக்கிறார்
காந்தியாகவே வாழ்கிறார்

குஞ்சுண்ணி
இப்போது ஒரு முழு காந்தியவாதி....

7 comments:

  1. அது சரி.. காந்தியின் சிரிப்பில்லாத உலகம் என்று ஒன்று இருக்க முடியுமா??? அதை தெரிந்து தான் காந்தியைப் பற்றி எழுதினாரோ ;)

    ReplyDelete
  2. மனைவி சாந்தியை கூட
    காந்தி எ‌ன்று விளித்தார்

    பூந்தி தட்டை பார்த்தாலும்
    காந்தி காந்தியென்று உருகினா‌‌‌ர் //

    லாசாராவின் பேரன் நீங்கதானோ?

    ReplyDelete
  3. லீசாரேன்னு போடவேண்டியது.. slip of the fingersu

    ReplyDelete
  4. நன்றாக உள்ளது

    ReplyDelete
  5. இந்தக் கவிதையின் போது எழுத்தாளர் ஜெயமோகனின் நிழல் என் கண் முன்னே ஆடுகிறது.

    ReplyDelete
  6. ///ஐநூறு பத்துரூபாய்///

    boss...50X10

    ReplyDelete