Wednesday, March 3, 2010

காக்கை ஜாதி

காக்கை ஜாதி
————————————
நேற்று காலை
தெருமுனையில்
காக்கைகளின் கதறல்
மின்சார இணைப்பில்
அடிப்பட்டு இறந்திருக்க வேண்டும்
ஊகிக்க முடிந்தது

மிக சுலபமாக கடந்துவிட்டேன்
இரண்டு நிமிடம் கத்திவிட்டு
அவைகளும் ஓய்ந்திருக்கலாம்
இரைதேடியோ துணைதேடியோ
கூடுகளுக்கு சென்றிருக்கலாம்
இன்று மதியமும்
சில காக்கைகளை
சந்திக்க நேரிட்டது

ஒரு காக்கையை
ஸ்பென்சர் டெய்லியில் பார்த்தேன்
ஒரு காக்கையை
கத்திப்பாரா சந்திப்பில் பார்த்தேன்
ஒரு காக்கையிடம்
கன்னிமாரா நூலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது
ஒரு காக்கையிடமிருந்து
குறுஞ்செய்தி வந்தது

எனக்கு தெரிந்த காக்கையொன்று
வளசரவாக்கத்தில் இறந்துவிட்டது
கத்தப்போக வேண்டும்

7 comments:

  1. சிதம்பர ரகசியத்தை காப்பாத்துறதுக்காக சென்னையில கத்ததுறதாமே அப்படியா

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாருக்கு மக்கா.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு மக்கா.

    ReplyDelete
  4. மிக மிக அருமை.
     
    செத்துக்கிடந்தது ஒற்றைக் காகம்
    முட்டிமோதியது காக்கைக் கூட்டம்
    ரோட்டோரம்
    அநாதைப் பிணம்!
     
    பள்ளிக்காலத்தில் எங்கோ படித்தது. எழுதியவர் யாரென்று தெரியவில்லை.

    ReplyDelete
  5. நன்றி ஜோதி
    நன்றி பா.ரா
    நன்றி சுந்தர்
    நன்றி உழவன்

    ReplyDelete