பேனாவால் எழுதினாலும், பென்சிலால் எழுதினாலும் ஒன்றுதான்.மனதில் பிறப்பதை ஒரு ஊடகத்தில் பதிவு செய்யும்போதே அவன் எழுத்தாளன் ஆகிவிடுகிறான். எழுதுவதற்கு பேனா (அ) பென்சில் (அ) மவுஸ் ஒரு கருவிதான். டிவியில் நடிப்பவனையும் நடிகன் என்றுதான் அழைக்கிறோம். சினிமாவில் நடிப்பவனையும் நடிகன் என்றுதான் அழைக்கிறோம். ஒரு வசதிக்காக அடையாளம் சொல்ல டி.வி ஆக்டரஸ் என்றோ, சினி ஆக்டரஸ் என்ற சொல்லாட்சியை பயன்படுத்துகிறார்கள். இப்போது டி.வியில் நடிப்பவர்கள் சினிமாவிற்கும், சினிமாவில் நடிப்பவர்கள் டிவியிற்கும் மாறி,மாறி வரும்போது நமக்கு குழம்புகிறது. நடிகன் எங்கு நடித்தாலும் நடிகன் என்று பொதுப்பெயரை மக்கள் வைத்துவிடுகிறார்கள்.
ஜெயமோகன்,எஸ்.ரா போன்றோர் வலைத்தளத்தில் எழுதுவதால் அவர்களை பதிவர்கள் என்று அழைக்கலாமா? அல்லது பதிவர்கள் அச்சு ஊடகத்தில் எழுதுவதால் அவர்களை எழுத்தாளர்கள் என்று அழைக்கலமா? சுஜாதா அவரது இறுதிக்காலங்களில் பேனாவே
பயன்படுத்தியிருக்கமாட்டார். எல்லாமே கணிப்பொறியில் தட்டச்சு.பேனா பயன்படுத்தாமல் கீபோர்டை வைத்து தட்டச்சு செய்ததால் அவரை தட்டர் என்று அழைக்கமுடியுமா? எழுத்து எப்படி வெளிப்பட்டாலும் எழுத்து எழுத்துதான்.
அச்சு ஊடகத்தில் எழுதுபவர்கள்தான் எழுத்தாளர்கள் என்றால் சரோஜாதேவியில் கதை எழுதுபவர்கள் நாங்களும் எழுத்தாளர்கள் என்று கிளைம் செய்ய வரலாம். இணையமோ அச்சு ஊடகமோ பிரச்சினை இல்லை. கொஞ்சம் கொஞ்சூண்டு தரமாய் எழுதினாலே போதும். அவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று கர்வமாக சொல்லிக்கொள்ளலாம்.
சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு
நாள் : 27/03/10
கிழமை ; சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கலைஞர் நகர்.
சென்னை:
தொடர்புக்கு..
மணிஜி : 9340089989
M.M.அப்துல்லா : 9381377888
கேபிள்சங்கர் : 9840332666
லக்கிலுக் : 9841354308
நர்சிம் : 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010
சங்கத்துக்கு நான் வைக்கும் முதல் கோரிக்கை:-
சங்க உறுப்பினர்கள் தங்கள் தளத்தில் அனானிமஸ் பின்னூட்டங்களை தவிர்க்க உத்தரவிட வேண்டும். அனானிமஸ் பின்னூட்டங்களை ஐ.பி அல்லது பதிவர்களை ஆதாரபூர்வமாய் கண்டுபிடித்தால் அவர்களை பிளாகுலகை விட்டு பத்து வருடம் தள்ளி வைக்க வேண்டும். அவர்கள் பிளாக்கை ஆரும் படிக்க கூடாது. அவர்கள் பிளாக்கில் ஆரும் பின்னூட்டம் போடக்கூடாது. அவர்கள் பிளாக்கை ஆராவது படித்தால் அவர்களையும் பிளாகுலகை விட்டு தள்ளிவைக்கவேண்டும்.நாட்டாமை கவனிப்பாராக...
எ.பி.லோகோ
'நச்' னு இருக்கு!
ReplyDeletegood korikkai
ReplyDeleteவி.முருகன். உங்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteசரி தான் கவிஞரே :)
ReplyDelete