பொட்டிதுரை என்ற ராஜதுரையை
போலீசார் நேற்று என்கவுண்டரில்
கொன்று விட்டார்கள்
பொட்டிதுரைக்கு
இரண்டு மனைவிகள்
ஒரு மகன்
பொட்டிதுரை
ஆறுமாதம் முன்புதான்
ஜாமீனில் வந்திருந்தான்
உள்ளூர் பிரமுகர் ஒருவருடன்
பொட்டிதுரைக்கு நெருங்கிய தொடர்பு
பிரமுகர் பெயர்தான் தெரியவில்லை
நேற்றுவரை
காவல்துறை நண்பர்களோடு
ஓரே தேநீர் குவளையில்
தேநீர் அருந்தியவன்தான்
இந்த பொட்டிதுரை
பொட்டிதுரையை சுட்டுக்கொன்றதற்கு
பல காரணங்களை
காவல்துறை சொல்கிறது
எல்லாமே
பொட்டிதுரையென்ற
பெயர்க்காரணம் போலவே
புதிராக இருக்கிறது
Dear Vinayagamurugan,
ReplyDeleteThis is a good one.
Regards,
Ragavan
//எல்லாமே
ReplyDeleteபொட்டிதுரையென்ற
பெயர்க்காரணம் போலவே
புதிராக இருக்கிறது//
:-)))
விநய், இதுலேருந்து ஒன்னு நல்லா தெரியிது...நீங்க தொ.பெ. பார்த்து ரொம்ப கெட்டுப்போரீங்கன்னு.
ReplyDelete