பாருக்குள்ளே நல்ல நாடு
———————————————————————
காடெங்கும் அடுக்குமாடிகள்
வீடெங்கும் தொலைக்காட்சிகள்
தெருவெங்கும் சாக்கடைகள்
ஊரெங்கும் சாமியார்கள்
பையெங்கும் கடன்அட்டைகள்
வழியெங்கும் செல்போன்பேச்சுகள்
வாயெங்கும் அறிவுரைகள்
மனசெங்கும் கழிவறைகள்
மேடையெங்கும் அடுக்குமொழிகள்
பாடையெங்கும் செத்த மூதிகள்
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு
எங்கள் நாட்டுக்குள்ளே
நல்ல பாரு பிரபா ஒயின்ஸ்
நவீன அவலங்கள்.....
ReplyDeleteநல்லபார் வசதியில்லா நாடு நல்ல நாடா?
ReplyDeletevery interesting and very nice.
ReplyDeleteரசிக்கும் படியாக இல்லை நண்பா
ReplyDelete