முன்பே எழுதிவிட்டேன். பதிவிட கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இந்த இதழ்
அகநாழிகை, ஆனந்தவிகடனில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. நன்றி
வலது
——————
கழிவறை கோப்பையில்
ஏதாவது தப்பித்தவறிவிட்டால்
முந்திவருவது இடதுகைதான்
வலதுகை புனிதமானது
ஒரு ரூபாய் நோட்டிற்கோ
ஒரு கோவில் பிரசாதத்திற்கோ
இடதுகை நீட்டினால் மகாபாதகம்
வலதுகை புனிதமானது
எதிரியாகவே இருந்தாலும்
ஆசிர்வதிக்க உயர்த்துவதில்லை
இடதுகையை
வலதுகை புனிதமானது
நேசக்கரமோ அபயக்கரமோ
முதலில் மறைப்பது இடதுகையை
வலதுகை புனிதமானது
வலதுகை புனிதமானது
எல்லா இடத்திலும்
எல்லா நேரத்திலும்
என்வீட்டு காலண்டரில்
உமாதேவி வலதுப்பக்கம்
சிரிக்கும் சிவனின்
புனிதம் போல
33
——
மேடயேறிய தலைவர்
மூச்சுக்கு முன்னூறு முறை
முப்பத்துமூன்று முப்பத்துமூன்று
முழங்கிக் கொண்டிருந்தார்
இரவுக்குள் வாங்கி தருவதாக
சத்தியம் கூட செய்தார்
மேடையிலிருந்து கீழிறங்கி
மகளிரணித் தலைவியை பார்த்தவர்
உதவியாளரிடம் கேட்டார்
ஆமா…அம்மணிக்கு என்ன வயசு?
முப்பத்துமூன்று இருக்கும்
ரொம்ப சந்தோசம் விநாயகம்,வாழ்த்துக்கள்!
ReplyDeleteரெண்டு கவிதையும் பிடிச்சிருக்கு!
ஆமா,வினாயகத்திற்கு வயசு என்ன இருக்கும்? :-)
நன்றி பா.ரா
ReplyDeleteமுப்பத்துமூன்று இருக்கும் (உண்மைதான்)
அருமை
ReplyDeleteநல்லாயிருக்கு அண்ணா வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDelete//ஆமா…அம்மணிக்கு என்ன வயசு?//
ReplyDeleteஎன்ன சொல்றதுனே தெரியல.. அருமை
நன்றி திகழ்
ReplyDeleteநன்றி ரவிசாந்
நன்றி உழவன்