Tuesday, March 9, 2010

துறவிக்காமம்

(நன்றி: தலைப்பு உபயம் - அகநாழிகை வாசு)

துறவிக்காமம்
--------------

ஒரு போலிச்சாமியார் பிடிபட்டதை
நொடிக்கொருதரம் டி.வியில் காட்டினா‌‌‌ர்கள்
நடிகையின் முகம் மறைக்கப்பட்டிருந்தது
எந்த நடிகையென்று கண்டுபிடிப்பதோ
கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது

ஒருக்கணம் கற்பனை செய்துபார்த்தேன்
ஒவ்வொரு நடிகையாக வந்துப்போனா‌‌‌ர்கள்
காவியுடை அணிந்தபடி நான்
கட்டிலில் ஒரு நடிகை
கட்டிப்பிடித்து ஒரு நீ.....ண்ட முத்தம்
ஆஹா...ஆஹா...ஆஹா
நல்லவேளை
யாரும் என்னை கவனிக்கவில்லை
யாரும் என்னை பிடிக்கப்போவதுமில்லை

7 comments:

  1. /எந்த நடிகையென்று கண்டுபிடிப்பதோ
    கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது

    அப்படியா ? மறு நாள் செய்தித்தாளில் பார்த்தபோதே நான் எளீதில் கண்டுபிடித்துவிட்டேன்.

    ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் அந்த இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்வதுதான் உளவியல் நிதர்சனம்.

    ReplyDelete
  2. நம்ம கடவுள்யா... யாருக்கும் பயப்பட தேவையில்லை.. :)

    ReplyDelete
  3. :-)

    D.R.Ashok said...

    நம்ம கடவுள்யா... யாருக்கும் பயப்பட தேவையில்லை.. :)

    :-)

    ReplyDelete
  4. துறவிக்காமம் நன்றாகத்தானிருந்தது ;-)

    ReplyDelete
  5. நன்றி முத்துவேல்
    நன்றி அசோக்
    நன்றி பா.ரா
    நன்றி ஜெனோவா
    நன்றி நாணல்

    ReplyDelete