Sunday, March 14, 2010

இரண்டு கவிதைகள்

அழகு
—————
கறிக்கடைக் கூண்டில்
கறுப்புநிற கோழிக்குஞ்சொன்று
கோதுமையை கொத்தி கொத்தி
தின்றுக்கொண்டிருந்தது லாவகமாக
ஐஸ்கீரிமை சுவைக்கும்
ஐந்து வயது‌ குழந்தைபோல
அழகென்றால் அழகு
அப்படியொரு அழகு
கடித்து தின்றுவிடலாம் போல

பாவம்
——————
கசாப்புக்கடையில்
கட்டிப்போட்டிருந்த ஆடு
புல்கட்டை விழுங்கிக்கொண்டிருந்தது
அவசரம் அவசரமாய்
பாவம் கொலைப்பட்டினி போலும்

8 comments:

  1. பாவம் இரண்டுமே. கவிதைகள் அருமை.

    ReplyDelete
  2. ரெண்டுமே மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது விநாயகம்.

    ReplyDelete
  3. வினய், அழகு ரொம்ப அழகா இருக்கு...

    ReplyDelete
  4. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     
    (Pls ignore if you get this mail already)

    ReplyDelete
  5. ரொம்பவும் சரளமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  6. ஆடு,கோழின்னு கவிதை அமர்க்களமாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நன்றி ராமலக்ஷ்மி
    நன்றி பா.ரா
    நன்றி மதன்
    நன்றி கண்டிப்பாக மேஹர்
    நன்றி ஜெகதீசன்
    நன்றி மோகன்
    நன்றி முத்துவேல்

    ReplyDelete