Tuesday, February 16, 2010

குரு

குரு
-----
தேநீர்க்கடையினுள்
நான் பார்த்த மனிதர்
தலைக்கு பின்னால் ஒளிவட்டம்


அர‌சிய‌ல் பேசாதீர் மீறி
அடித்துக் கொண்டிருந்தோம்
அவரை பார்த்தேன்
அமைதியாக தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்


விலைவாசி ஏற்றம் பற்றி
விலாவாரியாக விவாதிக்க ஆரம்பித்தோம்
அவரை பார்த்தேன்
கருமமே கண்ணாய் உறிஞ்சிக்கொண்டிருந்தார்


கடவுள் பற்றியும்
வாழ்க்கை பற்றியும் பேச்சை தொடர்ந்தோம்
அவரை பார்த்தேன்
மவுனப்புன்னகையுடன் டீயை பார்த்தார்


காராசாரமாய் ஆரம்பித்தோம்
கள்ளக்காதல் செய்தியொன்றை
அவரை பார்த்தேன்
கடைசிக்கோப்பை அமிர்தத்தை ரசித்துக்கொண்டிருந்தார்
ஜென் குருவாய் இருப்பாரோ?


தியானத்தின் உச்சத்தில்
வெறுமையான கோப்பையுடன்
எழுந்தவர்
என்னை கைகாட்டி
ஏதோ சொல்லி நடந்தார்
க‌ல்லா முதலாளியிடம்
ஜென் குருவேதான்


பரவசமாய் ஓடிய என்னை
வழிமறித்த முதலாளி
இரண்டு டீக்கு காசு தரணும்
கேட்ட நொடியில் ஞானம் பெற்றேன்

8 comments:

  1. நல்லாருக்கு குரு

    ReplyDelete
  2. நச்சுன்னு இருந்தது கவிதை பொருளோடு...

    ReplyDelete
  3. ரசனையான கவிதை வினய் :-)

    ReplyDelete
  4. Plain Poetry அதிகமாக தென்படுகிறது சமீபகாலமாய் உங்கள் கவிதைகளில்.. கூடவே அழகான அங்கதமும்.. வாழ்த்துக்கள் வினய்

    ReplyDelete
  5. நல்லா இருக்கு வினய்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  6. நன்றி ஜோதி
    நன்றி தமிழரசி
    நன்றி உழவன்
    நன்றி மாதவராஜ்
    நன்றி மதன்
    நன்றி ஜேகே

    ReplyDelete