Friday, February 19, 2010

சில்லறை

சில்லறை
—————————
நான் அவனுடன்
சுற்றியலைந்த நாட்களில்
கோனா‌‌‌ர் மாந்தோப்பில்
மாங்காய் திருடி உதை வாங்கியுள்ளான்

பெண்கள் படித்துறைப்பக்கம்
மறைந்திருந்து பார்த்ததில்
பஞ்சாயத்தில் செருப்படி விழுந்திருக்கிறது

ஊருக்கு வெளியே ஓடும்
பலான படத்தை பார்க்க
அழைத்துச் சென்றதே அவன்தான்

இந்த முறை
ஊருக்கு சென்ற போது
சந்திக்க நேரிட்டது
தொப்பையும் சங்கிலியும் மின்ன
ஆள் பருத்திருந்தான்
எம்.எல்.ஏவாகி விட்டான்
என் பால்ய சிநேகிதன்

இன்னுமொன்றும்
சொல்லியாக வேண்டும்

ஒருமுறை
கோயில் உண்டியலை
உடைத்து திருடியிருக்கிறான்

சட்டென நிழலாட நினைவூட்டினேன்
சிரித்தபடியே என்னிடம் சொன்னான்

இப்போதெல்லாம்
அது போன்ற
சில்லறைத்தனங்களை செய்வதில்லையாம்

8 comments:

  1. ஆகா நல்லாய் இருக்கு

    ReplyDelete
  2. நண்பரே!
    அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

    ReplyDelete
  3. //இப்போதெல்லாம்
    அது போன்ற
    சில்லறைத்தனங்களை செய்வதில்லையாம்// நல்ல நக்கல். ரசித்தேன். உங்களின் கோவில் மிருகம் புத்தகம் படித்தேன், அற்புதமாய் வந்திருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமை

    /இப்போதெல்லாம்
    அது போன்ற
    சில்லறைத்தனங்களை செய்வதில்லையாம் /

    கலக்கல்

    இதே தலைப்பில் மு.மாறன் அவர்களின் கவிதையைத் தான் நினைவிற்கு வருகிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நல்ல சில்லறை தான்

    ReplyDelete
  6. நன்றி தியா
    நன்றி பா.ரா :)
    நன்றி ராமலக்ஷ்மி
    நன்றி மாதவராஜ்
    நன்றி MJV
    நன்றி திகழ்
    நன்றி லாவண்யா

    ReplyDelete
  7. அழகு.. இனி ஏன் சில்லறைகளுக்கு அலையவேண்டும் :-)

    ReplyDelete