சிரிப்பு வருது
எங்கள் ஊரில் பைத்தியக்காரர்களின்
எண்ணிக்கை நாள்தோறும் பெருகுகிறது
சாலை சந்திப்புகளில்
சிக்னலிற்கு காத்திருக்கும்போது
ஏதாவது ஒரு பைத்தியத்தை
எதிர்கொள்ளாமல் இருந்ததில்லை
இன்னும் சில பைத்தியங்கள்
காதில் ஏதோ மாட்டியபடி
தனக்குத்தானே பேசியபடியும்
வண்டியோட்டியபடியும் சிரித்தபடியும்
அலுவலகத்தில் சக பைத்தியமொன்று
நொடிக்கொருதரம் பங்குச்சந்தை
செய்திகளை வாசிக்கும்
இன்னொரு பைத்தியம்
காப்பீட்டு திட்டங்கள் பற்றி
நாள் முழுதும் பேசிக்கொண்டிருக்கும்
நேற்று ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார்
அவருக்கு ஓட்டு போட்டால்
அடுத்த வருடமே
ஊரை சொர்க்கமாக்கி விடுவதாக
உறுதியளித்தார்
விடாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
சிரிப்பு வருது சிரிப்பு வருது...
ReplyDeleteநானும் விடாமல் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்....
ReplyDelete\\மாதவராஜ் said...
ReplyDeleteநானும் விடாமல் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்....\\
நானும்.
லிஸ்டில் எங்களைப்போன்றவலைப்பைத்தியங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..
ReplyDeleteஓ ஹோ...
ReplyDeleteகடைசி பாயிண்ட் நச் :)
ReplyDeleteகவிதை மிக யதார்த்தம்....
ReplyDeleteஇன்னோரு மனபிழையாளன் கருத்துரை அனுப்புகிறேன்.
சிரிப்பு வருது, சிரிப்பு வருது,
ReplyDeleteசிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது.
சின்னமனுசர், பெரிய மனுஷர்,
செயலைப் பாத்துச் சிரிப்பு வருது.
நல்லாப் பாடுனாய்யா, சந்திரபாபு.
Super....naiyaandi
ReplyDelete:) Super!
ReplyDeleteநன்றி குணசீலன்
ReplyDeleteநன்றி மாதவராஜ்
நன்றி அம்பிகா
நன்றி கண்ணகி. சேர்த்துடறேன்
நன்றி ஆறுமுகம் முருகேசன்
நன்றி கண்ணண்
நன்றி கருணாகரசு
நன்றி வாசன்
நன்றி வேல்கண்ணன்
நன்றி தீபா