Saturday, July 25, 2009

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது
-----------------------
அண்மையில் நான் ரசித்த புத்தகம் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசனின் "அந்தரங்கம்". 112 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் கவிஞர் விக்கிரமாதித்தியன் 34 பக்கங்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும், விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் செல்வராஜ் ஜெகதீசன். அந்த முப்பதுநாலு பக்க முன்னுரையில் கவிஞர் விக்கிரமாதித்தியன் நொந்துப்போய் எழுதியுள்ளார் இப்படி.


"கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.முத‌லி‌ல் கவிஞன் தீர்க்காயுசோடு இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை."

வரிகள் மனதை ஏதோ செய்கிறது.

இனி புத்தகத்திலிருந்து ‌சில கவிதைகள்
களவு போனது
கரையோரம் இருந்த
கடிகாரத்தோடு

அருவிக்குளியல்
தந்த
ஆனந்தமும்.

சில்லென்று அருவிச்சாரல் போல மனதை நனைக்கும் வரிகள்.

அந்தரங்கம் - ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன்
பக்கம் 112 - விலை ரூ.60
வெளியீடு - அகரம், தஞ்சாவூர்

‌சில கவிதைகள் வார்த்தை விளையாட்டுகள் போல வருகின்றன

விக்கிரமாதித்தியன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் இப்படி"கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன் தன்னையறிந்த கவிஞராக இருக்கிறார்." அதற்கு உதாரணமாக உங்களை என்னை திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை எ‌ன்ற நவீன விருட்சத்தில் வெளியான கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார்.
அஞ்சல் அட்டை கவிதை ரசிக்க வைக்கிறது. செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள் மிக எளிமையாக இருக்கின்றன. மனதை ஆழமாகவும் ஊடுருவி செல்கிறது. வாழ்த்துகள் கவிஞரே. விரைவில் இரண்டாவது தொகுப்பை எதிர்பார்க்கின்றோம்..

செல்வராஜ் ஜெகதீசனின் வலைமனை http://selvarajjegadheesan.blogspot.com/

1 comment: