Monday, July 27, 2009

"அவசர சிகிச்சை" - உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளியான எனது "அவசர சிகிச்சை" கவிதை வாசிக்க...

அவசர சிகிச்சை
நீண்ட ரப்பர்க்குழாயின்
ஒரு முனை
வாயினுள் இறங்குகிறது
வலுக்கட்டாயமாக
உப்புக்கரைசலை ஊற்றுகிறார்கள்
இன்னொரு முனையில்
யாரோ
தலையை அமுக்கி
வயிற்றை பிதுக்கியதில்
விழிகள் வெளியே விழுகின்றது
மலக்கரைசல் உகந்தது
ஏதோவொரு குரல்
ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது
குடல் அறுத்துக்கொண்டு
வருவது போல கேட்கிறது
ஓங்கரிப்பு
பேசாமல் வாழ்ந்தோ
செத்தோ தொலைத்திருக்கலாமென்றே
தோன்றுகிறது
தற்கொலைக்கு பிறகு நடக்கும்
கொலையொன்றில்

-நன்றி
என். விநாயக முருகன்

No comments:

Post a Comment