Saturday, December 5, 2009

உலகக் கவிஞர்கள் - 1

உலகக் கவிஞர்கள்
---------------------------
பிரம்மராஜன் அவர்கள் தொகுத்த சமகால உலகக் கவிதை (உயிர்மைப் பதிப்பகம்) படித்து கொஞ்சம் மண்டை காய்ந்து விட்டது. சில கவிஞர்கள் பெயர்களை எல்லாம் உச்சரிக்கையில் பல் சுளுக்கி விட்டது. இவர்களை நெட்டில் தேடி அலைந்தபோது சிலர் முகவரிகள் கிடைத்தது. இங்கு அவற்றை பதிவு செய்கின்றேன்.சில கவிஞர்களின் வலைத்தள முகவரிகள் மட்டும் கிடைக்கவில்லை. யாராவது பகிர்ந்துக்கொண்டால் படிக்க வசதியாக இருக்கும். சில்வியா பிளாத் கவிதைகளை நாகார்ச்சுனன் தளத்தில் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பார்க்கலாம். பாப்லா நெரூடா கவிதைகள் திண்ணை.காமில் கிடைக்கும். பிரம்மராஜன் அவர்களது வலைத்தளத்திலும் படிக்கலாம்...


உலகக் கவிஞர்கள் பட்டியல்
-------------------------
ஐரோப்பா
-----------
1.பெர்டால்ட் ப்ரக்ட் (ஜெர்மனி)
2.குந்தர் கூநர்ட் (ஜெர்மனி)
3.பால் ஸெலான் (ஜெர்மனி)
4.டாமஸ் ட்ரான்ஸ்ரோமர் (ஸ்வீடன்)
5.செஸ்வா மிவோஷ் (போலந்து)
6.ஸ்பிக்நியூ ஹெர்பர்ட் (போலந்து)

போலந்து
-----------
1.ததயூஸ் ரோஸ்விட்ச்ட்
2.அன்னா ஸ்விர்ஸைனிஸ்கா
3.விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
4.இங்க்போர்க் பாக்மன் (ஆஸ்திரியா)

மத்திய ஐரோப்பா
-------------------
1.வாஸ்கோ போப்பா(செர்பியா)
2.மிராஸ்லாவ் ஹோலுப் (செக்கஸ்லோவாகியா)
3.யான் காப்லின்ஸ்கி (எஸ்டோனியா)
4.நினா கேஸியன் (ரொமானியா)
5.மாரின் ஸோரெஸ்க்யூ (ரொமானியா)
6.ஆக்னநெஸ் நெமிஸ் நேகி (ஹங்கேரி) - Ágnes Nemes Nagy
7.டெஸ்ஸோ டேன்டோரி (ஹங்கேரி)
8.நாஸோஸ் வாயெனா‌‌‌ஸ்
9.பெரன்ஸ் யூஹாஸ் (ஹங்கேரி) Ferenc Juhász
10.சேஸரே பவேசே
11.பிரைமோ லெவி (இத்தாலி)
12.பியர் பாவ்லோ பாஸோலினி (இத்தாலி)
13.பாட்ரீஸியா காவல்லி (இத்தாலி)
14.ஃபெர்னான்டா பெசோவா (போர்ச்சுகல்)
15.ஃபிலிப் ஜக்கோட்டே (ஃபிரான்ஸ்)
16.ப்ளெய்ஸ் ஸென்றார்ஸ் (ஸ்விட்ஸர்லாந்து)
17.ஹைன்ரிக் நார்பிராண்ட் (டென்மார்க்)

ரஷ்யா
-------
1.ஓசிப் மெண்டல்ஷ்டாம்
2.மரீனா ஸ்வெட்டயேவா

கனடா
-------
1.மைக்கேல் ஓன்யாட்டே

லத்தீன் அமெரிக்கா
--------------------
1.பாப்லோ நெரூடா (சிலி)
2.ஆக்டேவியா பாஸ் (மெக்சிகோ)
3.ராபர்ட்டோ யூவாரோஸ்
4.கிளாரிபெல் அலெக்ரியா
5.ஜோஆவோ கேப்ரல் டி மெலோ நெட்டோ
6.தான்சி மோர்யோன்

மத்திய கிழக்கு நாடுகள்
------------------------
1.எஹுதா அமிக்ஹாய் (இஸ்ரேல்)
2.தாஹ்லியா ராவிகோவிச் (இஸ்ரேல்)
3.டேன் பேகிஸ் (இஸ்ரேல்)
4.மொஹமத் தர்வீஷ் (பாலஸ்தீனம்)
5.அடோனிஸ் (லெபனான்)
6.நஸீம் ஹிக்மெத் (துருக்கி)

ஆப்பிரிக்கா
------------
1.பிரேட்டன் பிரேடன்பாஹ் (தென்னாப்பிரிக்கா)
2.ஜெரிமீ க்ரோனின்
3.டென்னிஸ் ப்ரூடாஸ் (தென்னாப்பிரிக்கா)
4.டெர்க் வால்காட் (கரீபியா)
5.கோஃபி அவூனோர் (கானா)

ஆசியா
-------
1.டக்குமுரா கொட்டாரோ (நம்புங்க பெயரே இப்படித்தான்) (Takamura Kotaro) (ஜப்பானிய கவிஞர்)
2.ஏ.கே.ராமானுஜன் (இந்தியா)
3.ஜெயந்த மகாபத்ரா (இந்தியா)
4.ரியூச்சி தமுரா(Ryuichi Tamura ) (ஜப்பான்)
5.ஷன்டாரோ தனிக்காவா
6.சிமாகோ தடா
7.சப்பார்டி ஜோக்கோ தமோனோ (இந்தோனீசியா)
8.ஸோ சோங்-ஜூ (கொரியா)
9.யாங் லியூஹாங் (yang li yu huang) (சீனா)
10.ஷூடிங்
11.நகுயென் சி தியென்(வியட்நாம்)
12.சோங் ஹ்யோன்-ஜோங் (கொரியா)
ஒரு கவிதையை மொழிப்பெயர்ப்பது போல சிரமமான வேலையெதுவுமில்லை. ஒரிஜினா‌‌‌லிட்டி கெடாமல் அதேநேரம் தமிழ் சூழலுக்கும் ஏற்றவாறு கொண்டு வருவதற்குள் உயிர் போகிறது.நஸீம் ஹிக்மத்தின் ஒரு கவிதையை மொழிபெயர்த்தேன்.

நஸீம் ஹிக்மத்
——————————————
The Walnut Tree

my head foaming clouds, sea inside me and out
I am a walnut tree in Gulhane Park
an old walnut, knot by knot, shred by shred
Neither you are aware of this, nor the police

I am a walnut tree in Gulhane Park
My leaves are nimble, nimble like fish in water
My leaves are sheer, sheer like a silk handkerchief
pick, wipe, my rose, the tear from your eyes
My leaves are my hands, I have one hundred thousand
I touch you with one hundred thousand hands, I touch Istanbul
My leaves are my eyes, I look in amazement
I watch you with one hundred thousand eyes, I watch Istanbul
Like one hundred thousand hearts, beat, beat my leaves

I am a walnut tree in Gulhane Park
neither you are aware of this, nor the police


Nazim Hikmet

translated from Turkish by Gun Gencer

வாதாமரம்
—————————

மேகங்களை தூவும் என் தலை, கடல் என்னுள்ளும் வெளியும்
குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
ஒரு முதிர்ந்த மரம், முடிச்சுகளும், வளையங்களுமாய்
நீங்களோ காவல்துறையோ இது அறியாதது

குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
என் இலைகள் விரைந்தசையும், நீரில் விரையும் மீனென
என் இலைகள் தூய்மையானவை, பட்டுக்கைக்குட்டையின் தூய்மையென
பிடுங்கி, துடை, என் ரோஜாவை, உன் விழியில் வழியும் கண்ணீரை
என் இலைகள் என் கரங்கள், நூறாயிரம் கரங்கள் எனக்கு
நூறாயிரம் கரங்களால் தொடுகிறேன் உன்னை, தொடுகிறேன் இஸ்தான்புல்லை
என் இலைகள் என் விழிகள், வியப்போங்க பார்க்கிறேன்
நூறாயிரம் விழிகளால் பார்க்கிறேன், பார்க்கிறேன் இஸ்தான்புல்லை
நூறாயிரம் இதயங்களாய், துடிக்க, துடிக்கிறேன் என் இலைகளை

குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
நீங்களோ காவல்துறையோ இது அறியாதது

(இஸ்தான்புல் - துருக்கியின் பழமையான நகரம்)
நன்றி http://www.cs.rpi.edu/~sibel/poetry/nazim_hikmet.html


டக்குமுரா கொட்டாரா கவிதையொன்ரை மொழிப்பெயர்த்தேன்

Extraordinary Chieko

Chieko sees what cannot be seen,
Hears what cannot be heard.

Chieko goes where no-one else can go,
Does what no-one else can do.

Chieko doesn’t see the physical me,
She yearns for the me behind me.

Chieko has lifted off the burden of pain
And drift into a realm of grace and beauty.

I hear her voice calling over and over to me
But Chieko no longer has a ticket to the human world.

அசாதாரணமான சிஎக்கோ

சிஎக்கோ கண்களுக்கு புலப்படாதவற்றை பார்ப்பாள்
காதுகளுக்கு கேட்காவற்றை கேட்பாள்

சிஎக்கோ யாரும் செல்லா இடங்களுக்கு செல்கிறாள்
யாரும் செய்ய முடியாதவற்றை செய்கிறாள்

சிஎக்கோ என்னை நானாய் பார்க்க மாட்டாள்
எனக்கு அப்பால் இருக்கும் என்னை காணத்தவிக்கிறாள்

சிஎக்கோ வலிகள் எல்லாவற்றையும் கடந்து விட்டாள்
அன்பு கலந்த ராஜ்யத்தில் கலந்து விட்டாள்

அவள் குரல் திரும்ப திரும்ப அழைப்பதை கேட்கிறேன்
ஆனால் சிஎக்கோவிற்கு , மனித உலகிற்கு திரும்ப வர அனுமதியில்லை..

நன்றி http://www.paularcher.net/translations/extraordinary_chieko.html
---- கொலைவெறி தொடரும்

6 comments:

 1. ஆங்கிலம் அல்லாத பிற மொழி கவிதைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட english versions கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட சில english version-களை refer செய்து மொழிபெயர்த்தால் இன்னும் சிறப்பாய் அமையும்.

  ex:: //நூறாயிரம் கரங்களால் தொடுகிறேன் உன்னை, தொடுகிறேன் இஸ்தான்புல்லை//
  English versions::
  // I touch you with one hundred thousand hands, I touch Istanbul // -Translated by Gün GENCER

  //Istanbul I touch you with a hundred thousand hands.// tr. by Richard McKane (http://www.nazimhikmetran.com/english/pages/siirleri/ceviz_agaci.shtml)

  "வாதாமரம்" இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு நேர்த்தியாய் மொழிபெயர்த்திருக்கலாமோ என்பது என் கருத்து.

  ReplyDelete
 2. பாப்லோ நெரூடா பற்றி சாரு எழுதியதாக நினைவு.
  உலகக் கவிஞர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
  (முக்கியமாக பிரம்மராஜன், அடுத்தமுறை சென்னை வந்தால் வாங்கிவிடுவேன்!)

  மொழிபெயர்ப்புக்குப் பொறுமையும், நிதானமும் மிக மிக அவசியம்.
  கொஞ்சம் வார்த்தைகள் மாறிப்போயினும் அர்த்தம் விபரீதமாய் முடிய வாய்ப்புண்டு.

  நல்ல முயற்சி. தொடருங்கள் வி.மு. ஸார்!

  -கேயார்

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு, ஆக்கம், விநாயகம்.

  முதல் தொகுப்பிற்கு வாழ்த்துக்களும் சகா!

  ReplyDelete
 4. அறிமுகங்களுக்கு நன்றி வி.மு.

  மொழியாக்கம் நல்ல முயற்சி.

  அனுஜன்யா

  ReplyDelete
 5. நன்றி கார்த்தி
  நன்றி கேயார்
  நன்றி ராஜாராம் (முதல் தொகுப்பிற்கு வாழ்த்துக்களும்)
  நன்றி அனுஜன்யா

  ReplyDelete