நன்றாக நினைவில் உள்ளது
நவம்பர் மாத இறுதி வியாழக்கிழமை. மாலை நான்கு மணி. இரண்டு நாட்கள் கழித்து பக்ரீத் பண்டிகை. மீர்சாகிப்பேட்டையில் கடைத்தெரு முழுதும் கலர் பொடிகள் தூவிய செம்மறி ஆட்டு மந்தைகள். அதன் மீது பள்ளிக்கூடம் விட்டு திரும்பும் சிறுவர்கள் கற்களையும், வாட்டர் பாக்கெட்டையும் வீசியபடி உற்சாகமாய் சென்றுக்கொண்டிருந்தனர் அவர்களை விட நான் உற்சாகமாய் சென்றுக்கொண்டிருந்தேன். ஆர்வம் கலந்த பதற்றம். மழை வரும் போல மேகங்கள் காட்சியளிக்க எதிரே ஒரு சாவு ஊர்வலம் அமைதியாக போய்க்கொண்டிருந்தது. ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் பர்தா போட்ட கல்லூரி பெண்கள் கண்களால் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அகநாழிகை வாசு தலை தெரிந்ததும் இன்னும் ஆர்வம் தாங்க முடியவில்லை. "புத்தகம் பைண்டிங்க்ல இருக்கு வாங்க" என்று பிரஸ் இருந்த சந்துக்குள் அழைத்துச் சென்றார்.
நர்சிம் புத்தகம் வந்து விட்டது. என்னுடையதும், பா.ரா வுடையதும் வரவில்லை. பதற்றமாகி விட்டது. நர்சிம்மின் அய்யனார் கம்மாவை புரட்டிக்கொண்டிருக்கையில் சில நிமிடங்களில் எனது கோயில் மிருகம் தொகுப்பை கொண்டு வந்தார்கள். பதற்றம் ஓடி பரவசம் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தை மறக்க முடியாது. கவிதைத்தொகுப்பு திருப்தியாக வந்துள்ளது. நன்றி அகநாழிகை. நன்றி வாசு.
அகநாழிகை பதிப்பகம் புத்தக வெளியீட்டு விழாவை டிசம்பர் 11 அன்று நடத்த இருக்கிறது. அறிவிப்பு குறித்தான பதிவு விரைவில்.
அனைவரையும் அழைக்கின்றோம்.
நன்றி
என்.விநாயக முருகன்
பி-கு
(இரண்டு நாட்களாக வேலைப்பளு. இரவில் சாமகோடாங்கி போல வீடு திரும்புவதால் புத்தக முன் அட்டையை ஸ்கேன் செய்ய முடியவில்லை.)
வாழ்த்துகள் விநாயகமுருகன்.
ReplyDeleteதொகுப்பை வாசித்துவிட்டேன். மிக நன்றாக இருக்கின்றது கவிதைகளும் தொகுப்பும் மேலும் அட்டைபட ஸீரங்கம் கோவில் யானையும்.
Congrats!!
ReplyDeleteவாழ்த்துகள் ... தொகுப்பை எப்படி வாங்குவது என்று சொல்லவும்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாசுதேவன் ப்ளாக் ல பாத்துட்டேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துகள் விநாயகமுருகன், உங்கள் தொகுப்பைப் பார்த்தேன், ரொம்ப நல்லா வந்திருக்கிறது, ரொம்ப மகிழ்ச்சி.
ReplyDeleteமுதன்முறை உங்களது உரைநடை வாசிப்பதாய் நினைவு...
ReplyDeleteநன்றாயிருக்கிறது!
-கேயார்
நன்றி லாவண்யா
ReplyDeleteநன்றி கார்த்திகேயன்
நன்றி நந்தா
நன்றி அசோக்
நன்றி மண்குதிரை
நன்றி யாத்ரா
நன்றி கேயார்