சாரு நிவேதிதா 15 ஆண்டுகளுக்கு் முன்பு எழுதிய கவிதை
பளிச் கவிதை - -3-- "பயம்"
பயம்
-----
பனங்கையின்
செல்லரித்துச் சிதைந்த
இடுக்கின் வழி சென்று
விரிசலுற்றிருந்த சுவரில்
குஞ்சு பொரித்து -
கவிதை எழுதிக் கொண்டிருந்த
அவனைப் பார்த்து
இருப்பின் பயங்கொண்டு
வெளிக்கும் உள்ளுக்குமாக
தத்தளித்து அலைந்து கொண்டிருந்த சிட்டுக்குருவி
நான் இன்னமும் இருக்கிறேன்
நீ இருக்கிறாயா
எனக் கேட்டு எழுதாமலேயே
காணாமல் போய்விட்ட
சிநேகிதன்
காரணம் சொல்லாமல்
வீட்டுக்கு வருவதைத் தவிர்த்த
சிநேகிதி
சத்தில்லாக் கவிதையெழுதும்
உன்னைச் சீந்த மாட்டேனெனச்
சொல்லிப் புறக்கணிக்கும்
மொழி
எழுத நினைத்து
எழுதாமல் விட்ட
கவிதையின் பொருளை
அவளிடம் விளக்க
தன்னிரக்கம் தன்னிரக்கம்
எனச் சொல்லித்
தலையிலடித்துக் கொண்டே
ஓடினாள்
சிநேகிதி
நன்றி
விருட்சம் கவிதைகள் தொகுதி-2
(1993-1995 வரையிலான கவிதைகள்)
படித்ததுதான், பிடித்தது
ReplyDeleteஎன்ன நண்பரே!
ReplyDeleteமுதலில் தண்டோரா,
அப்புறம் வெண்ணிற இரவுகள்,
இப்ப நீங்க....
சாருவைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கீங்க!
அவரைப் பத்தி சொல்லிகிட்டே போலாம்!
அவ்வளவு இருக்கு மனுசர் கிட்ட!!
-இன்றைய கவிதை நண்பர்கள்