
எனக்கு ஹாலிவுட் படங்கள் அவ்வளவாக பிடிக்காது. கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன். இது மிக அருமையான படம். ஆஹோ... ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிக்க முடிந்தது. பல இடங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. சில இடங்களில் தமிழ்ப்படங்களை போலவே குடும்ப செண்டிமெண்ட். சில இடங்களில் ரொமான்ஸ். குறிப்பாக சாண்ட்ரா புல்லாக்கின் (ஸ்பீடு படத்தில் பேருந்து ஓட்டும் அம்மணிதான்) நடிப்பு படத்தை தொய்வில்லாமல் இறுதிவரை ரசிக்க வைக்கிறது. படம் பெயர் The Proposal.
மார்கரெட் (சான்டாரா புல்லாக்) ஒரு புத்தக பதிப்பக கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் கனடாவிலிருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவரை பார்த்தாலே கம்பெனியில் இருக்கும் ஊழியர்கள் நடுங்குகிறார்கள். நம்ம ஆன்சைட் மேனஜர்கள் போல டெரர் ஆக இருக்கிறார். ஒருகட்டத்தில் அவரது அமெரிக்க விசா காலாவதியாகிறது. அவர் கனடாவிற்கே திரும்பியாக வேண்டிய கட்டாயம். சான்டாரா புல்லாக்கின் உதவியாளராக வேலை பார்க்கும் ரேயான் ரெனால்டை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். அதன் மூலம் அமெரிக்கா குடியுரிமை விசாவை தக்க வைத்துக்கொள்வது சான்டாரா புல்லாக்கின் எண்ணம். முதலில் ரெனால்ட் இத்திட்டத்திற்கு மறுக்க, சான்டாரா புல்லாக் அவனுக்கு வேலையில் புரோமோஷன் வாங்கி தருவதாக சொல்ல ரெனால்ட் சம்மதிக்கிறான். இவர்கள் திருமணத்தை சந்தேகிக்கும் குடியுரிமை அலுவலர்கள் அவர்களை வேவு பார்க்கிறார்கள். தம்பதிகள் இருவரும் அலாஸ்காவில் இருக்கும் ரெனால்ட்டின் வீட்டிற்கு செல்கிறார்கள். ரெனால்ட்டின் அப்பா,அம்மா மற்றும் பாட்டி சந்தோஷமாக புதுமண தம்பதிகளை வரவேற்கிறார்கள்.

பிறகுதான் படத்தில் கச்சேரி களை கட்டுகிறது. அங்கு நடக்கும் ரகளைதான் படமே. இருவரும் போலியாக புதுமண தம்பதிகள் போல நடிக்கிறார்கள். ரெனால்ட்டின் பாட்டியாக வரும் மேரி ஸ்டீன் பெர்க் அடிக்கும் ரகளையும், சாண்ட்ரா புல்லாக் மாட்டிக்கொண்டு முழிப்பதும் செம ஜாலியாக படத்தை பல இடங்களில் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. ஒரு கட்டத்தில் சாண்ட்ரா புல்லாக்கால் தாங்க முடியாமல் உண்மையை ஒத்துக்கொண்டு அலாஸ்காவை விட்டு ஓட, அப்புறம்? மீதிக்கு படத்தை பார்க்கவும்.
அண்மையில் நான் ரசித்து பார்த்த ரொமான்ஸ் கலந்த ஒரு காமெடி படம் The Proposal. இந்த படத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது. ஒருவேளை ஹாலிவுட்காரர்கள் குடும்ப உறவுகளை அன்பை மையப்படுத்தி எடுத்திருப்பதால் எனக்கு பிடித்துள்ளதோ..என்னவோ?
நல்ல அறிமுகம். விமர்சனமும் நன்றாக உள்ளது!
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த படம். அப்படியே தமிழ் படம் போல சென்டிமெண்ட், காதல் காட்சிகள் னு நல்லா இருக்கும். நள தமயந்தி இதுக்கு முன்னாடியே வந்த படம். இல்லாட்டி இத பார்த்து சுட்டது னு சொல்லி இருக்கலாம் :-)
ReplyDelete