மருத்துவக் காப்பீடு விற்கும்
நண்பரை சந்திக்க நேரிட்டது
உடல்நலனை விசாரித்தார்
உள்ளம் நெகிழ
என் நெஞ்சுவலிப் பற்றி கேட்டார்
மிகுந்த அக்கைறையோடு
சுவரிருந்தால் சித்திரமென்றார்
மூட்டுவலிப் பற்றி விசாரித்தார்
கனிவாய் தாயன்போடு
உடல் வளர்த்தால்
உயிர் வளருமென்றார்
புதிதாக வந்திருந்த
காப்பீட்டுத் திட்டத்தை
பரிவாக விவரித்தார்
பத்து வகை நோய்களுக்கு
பணம் தருவதாக நம்பிக்கையளித்தார்
சுலபத்தவணை வசதியென்றார்
குறைந்தப்பணமே ஆகுமென்றார்
இறந்துப்போனால்
பணம் கட்ட தேவையில்லையென்றார்
ஆறுதலாக இருந்தது
நன்றி
என்.விநாயக முருகன்
ஆறுதலாக இருக்கு.. :)
ReplyDelete:)
ReplyDeleteஅருமை!
ReplyDeleteநன்றி சரவணகுமார்
ReplyDeleteநன்றி அசோக் :)
நன்றி மோகன்
ஹா..ஹா.. என்ன சொல்வது... மிகவும் பிடித்திருக்கிறது.. நல்ல கவிதைங்க...
ReplyDelete