Friday, June 3, 2011

யுகப்புரட்சி

தெருமுனையில் நிற்கும் லாரியில்
தண்ணீர் பிடித்து வைத்தாயிற்று

தள்ளுவண்டிகாரனிடம்
பேரம் பேசி
நாளைக்கான காய்கறிகளை
பிரிட்ஜில் வைத்தாயிற்று

பிள்ளைகளுக்கு உணவூட்டி
உறங்க வைத்தாயிற்று

திங்கட்கிழமைக்கான
துணிகளை துவைத்து
இஸ்திரி செய்தாயிற்று

எலக்ட்ரிசிட்டி,டெலிபோன்
பில்களை செலுத்தியாயிற்று

கடன் அட்டைகளுக்கான
காசோலைகளை
காலையிலேயே அனுப்பியுமாயிற்று

மாலையில் ஒரு பொதுக்கூட்டம்
லஞ்ச ஊழல் எதிராக
போதுமான நேரமிருக்கு
ஊர் கூடி தேர் இழுக்க


நல்லவேளை
இன்று சனிக்கிழமை
அலுவலகமும் விடுமுறைதான்

திரும்பும் வழியில்
சரவணா ஸ்டோர்ஸ்
ஒரு எட்டு செல்ல வேண்டும் நேரமிருந்தால்


2 comments:

  1. Daily life . . Machine life . . Good kavithai

    ReplyDelete
  2. மதுரைப்பெண்ணைக் கிளிக் செய்தால் நிலாரசிகன் வலைப்பக்கத்திற்குச் செல்கிறது நண்பா..

    ReplyDelete