Wednesday, June 15, 2011

மசுரு

தெரிந்த பெண்ணொருத்தியிடம்
பேசிக் கொண்டிருந்தேன்
எனது கையிலிருந்த
ஜி.நாகராஜன் நாவலின்
அட்டைப்படத்தை பார்த்து புன்னகைத்தாள்

இவரை தெரியுமாவென்று
கேட்டேன்
தெரியாது எ‌ன்றாள்
ஜி.நாகராஜன்
தமிழின் முன்னோடி எழுத்தாளரென்றேன்
அவரது மீசை
அழகாக இருக்கிறது எ‌ன்றாள்

பாரதியோடு இவரும்
ஒப்பிடத்தக்கவரென்றேன்
பாரதி...பாரதி
இரண்டு முறை உச்சரித்தவள்
அவரது மீசையும்
அழகாக இருக்கும்
நாக்ராஜை விட எ‌ன்றாள்

எனக்கு முதல்முறையாக
கவிஞர்கள் மேல்
கோபம் வந்தது
மசுரு எ‌ன்று கத்தலாம் போலிருந்தது


.

5 comments:

  1. ///
    எனக்கு முதல்முறையாக
    கவிஞர்கள் மேல்
    கோபம் வந்தது
    மசுரு எ‌ன்று கத்தலாம் போலிருந்தது
    //
    ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. எங்கள் ஊரில் 'மசுரு' என்று சொல்வதெல்லாம் ரொம்ப சாதாரணம். கல்லூரி சென்ற புதிதில் நண்பன் ஒருவனை அப்படித் திட்டிவிட மிகவும் கொந்தளித்துப்போய்விட்டான். அப்புறம்தான் தெரிந்தது, மதுரைக்கு இந்தப் பக்கம் அது எவ்வளவு கோபம் ஏற்படுத்தும் வார்த்தை என்று!!!

    ReplyDelete
  3. கவிஞர் யாத்ராவின் புத்தகபெயரை சற்றே மயிர் மாற்றி.. சே... பெயர் மாற்றி போட்டு அப்பட்டமாய் காப்பி அடித்துயிருக்கிறீர்.. :)))

    கவுஜ நல்லாகீதுபா

    ReplyDelete