Saturday, June 4, 2011

குஞ்சுண்ணியின் கதை

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்தானே

எல்லாரையும் போல
அவர் கவிதைகளைத்தான்
முதலில் எழுத தொடங்கினா‌‌‌ர்

எழுத ஆரம்பித்த
‌சில வருடங்களில்
அவருக்கு புதிது பு‌திதாக சொற்கள்
வ‌ந்து விழுந்துக்கொண்டே இருந்தன

கவிதை எழுதியது போக
மீந்துப்போன சொற்களை வைத்து
என்ன செய்வது எ‌ன்று குழம்பினார்
சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார்

அப்படியும் சொற்கள் தீர்ந்தபாடில்லை
நாவல்களை எழு‌தி குவித்தார்

வீட்டிக்குள் குவிந்து கிடந்த சொற்கள்
மலையென
ஊரைதாண்டி வளர்ந்தபடியே போயிற்று

குஞ்சுண்ணி திகைத்தார்
வருவோர் போவோரிடமெல்லாம்
சொற்களை அள்ளி,அள்ளி கொடுத்தார்

ஆயிரம் பக்க நாவல்கள்
இரண்டாயிரம் பக்க நாவல்கள்
இரண்டு கைகளால் எழுத ஆரம்பித்தார்

சொற்கள் வளர்ந்துக்கொண்டேதான் போனது


நாவல்கள் ஊடாக சினிமாப்பாடல்கள்
திரைக்கதை வசனம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அஞ்சலிக் கட்டுரைகள்
பிட்டு நோட்டீஸ்கள்
பூப்புனித நீராட்டுகள்
அர‌சிய‌ல் பார்வைகள்

குஞ்சுண்ணி எழுதிக்கொண்டே போனா‌‌‌ர்

பசிக்கும்போது சொற்களை எடுத்து உண்டார்
தாகத்துக்கும் சொற்களையே குடித்தார்
சொற்களால் அழுதார்
சொற்களால் சிரித்தார்
சொற்களை தலைக்கு வைத்து உறங்கினா‌‌‌ர்
சொற்களால் திட்டினா‌‌‌ர்

குஞ்சுண்ணி ஒருநாள் இறந்தும் போனா‌‌‌ர்
இறப்பதற்கு முன் ‌சில சொற்களை
பிரத்யேகமாக
தனது கல்லறை வாசகத்துக்கென்று
எடுத்து வைத்துக்கொண்டார்

மீதமிருந்த சொற்களுக்கு
இப்படி ஒரு வழி செய்தார்

குஞ்சுண்ணியாக நான் எனது
உடல் நலத்துடனும், சுய நினைவுடனும்
என்னுடைய இறுதி விருப்புறுதியாக (உயிலாக)
அல்லது மரணசாசனமாக இதை எழுதுகிறேன்.

அடியில் கண்ட சொற்களை
எனது மகன் சின்ன குஞ்சுண்ணி பெயரில்
அவன் ஆண்டு அனுபவிக்க வேண்டி
எழு‌தி வைக்கிறேன்







12 comments:

  1. https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

    today, i have made some modifications in adding a label feed in google reader ....see it.d.

    ReplyDelete
  2. இது ஜெயமோஹனை தாக்குவது போல் உள்ளதே. ஜெமோ வை யாரவது சிறிது கிண்டல் செய்தாலும் மனம் மகிழ்ந்து சிபாரிசு செய்யும் சாருவும் களிப்போடு வெளியிட்டுள்ளார். ஏதாவது உள்குத்து உண்டா?

    ReplyDelete
  3. நன்றி அகமது சுபைர்
    நன்றி முத்துகிருஷ்ணன்..(இ‌து அவரல்ல)
    நன்றி மச்சி சார்

    ReplyDelete
  4. அருமை. பாராட்டுக்கள். யதார்த்தம் பொங்கும் இக்கவிதையையும்
    கருத்து கந்தசாமி கவிதையும் வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)
    மிக அழகாக எழுதுகிறீர்கள்

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

    ReplyDelete
  5. அருமையாக உள்ளது .வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  6. அற்புதம் குஞ்சுண்ணி பிறந்து அழ ஆரம்பிததஉஷயுடன் தமிழில் வார்ததைகள் பிறந்தன. அதற்குமுன் சைகையில் தமிழ் பேசப்பட்டது

    ReplyDelete