Saturday, February 13, 2010

காதலர்தின கவிதை-5

சென்னைக் காதல்
----------------

தண்ணி லாரி சத்தம் கேட்டு
ஓடிய மனைவியை
ஐந்து நிமிடம் கழித்து
அழைக்கிறான்
அலுவலகம் செல்லும்
வாசுகியின் கணவன்

குற்றம் பார்க்கின்
சுற்றம் இ‌ல்லை
குடத்தை பார்க்கின்
காதல் இல்லை

14 comments:

  1. என்னப்பா சொல்லவர?

    ReplyDelete
  2. அடடா... காதலை ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போல :)

    ReplyDelete
  3. அசோக்

    வாசுகியை அழைத்தவுடன் தண்ணிக்குடத்தை அப்படியே போட்டு வருகிறாள் வாசுகி. குடம் அந்தரத்தில் நிற்கிறது. ஏன்னா‌‌ வாசுகி பத்தினி. குடத்தை பார்த்தால் காதல் இல்லை... நான் குடம் (முலை) எ‌ன்று இன்னொரு அர்த்ததிலும் எழுதியிருந்தேன்

    ஜ்யோ -- அடங்க மாட்டோம் :)

    ReplyDelete
  4. விநாயகமுருகனின் குரல் “போராடுவோம், போராடுவோம், காதலுக்காக இறுதி வரை போராடுவோம்“

    ஏன் இந்த கொல வெறி விநய். காதலை விட்டுடுங்க பாவம் கதறுது.

    ReplyDelete
  5. பத்தாவதது படிக்கிறதில ஆரம்பிச்சு
    பாதி கிணறில் நிற்கிற குடம் வரையும் வந்தாச்சு
    நடத்துங்க

    ReplyDelete
  6. ஒன்று முதல் ஐந்து வரை கவிதை உங்களுடையது.தலைப்பு மட்டும் ஜஸ்ட் மிஸ்.

    "காதல் கைமா கவிதைகள்!"

    தலைப்பு என்னுடையது.

    நல்லாருக்கா வி-அநியாயகம்?

    :-))

    ReplyDelete
  7. அன்பு நண்பர் விநாயகமுருகன்,

    உங்கள் காதலர் தின கவிதைகள் அனைத்தும் படித்தேன். கணவெல்லாம் மிரட்டுகிறது என் பகல் தூக்கங்களில். கலாப்ரியாவின் முலை பற்றிய கவிதைகளில் இருக்கும் ஒரு கவிச்சி உங்கள் முலைக்கவிதைகளில் இல்லை என்றே தோன்றுகிறது. வி.மு.வின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால் இந்த ஐந்து கவிதைகளிலும் ஏனோ ஒரு மெனக்கெடல் அல்லது சமரசம் தெரிகிறது என்னவென்று தெரியவில்லை. துரிதகதியில் தாளம் தப்பி சிந்திவிடும் லயங்கள் ஒட்டாமல் இருக்கிறது கச்சேரி சபாவின் முன் பலகை விளம்பரங்கள் மாதிரி...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  8. வாசு...இன்று ஒரு நாள் மட்டும்தான்
    நன்றி ஸ்ரீ
    நன்றி ஜோதி
    நன்றி பா.ராஜாராம் (எல்லாம் நீங்க விகடனில் ஆரம்பித்து வைத்ததுதான்)

    நன்றி ராகவன். எனக்கு இந்த காதலை பற்றி எழுத தெரியாது. இன்னும் சொல்லப்போனா‌‌‌ல் வரவே வராது. காதலர் தினத்துக்காக மெனக்கட்டு எழுதியது. கற்றாரை கற்றாரே காமுறுவர் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை எ‌ன்று தோன்றுகிறது

    ReplyDelete
  9. அன்பு விநாயகமுருகன்,
    உங்களின் ஆனந்தவிகடன் கவிதையை மிகவும் ரசித்ததால், இதை எழுதினேன். உங்கள் காதல் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடித்தது வி.மு. அதனால் உங்களுக்கு காதல் தெரியாது என்றால் எனக்கு நம்பமுடியவில்லை.

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  10. "காதல் கைமா கவிதைகள்!" சூப்பர் சித்தப்ஸ்

    //எல்லாம் நீங்க விகடனில் ஆரம்பித்து வைத்ததுதான்)//
    விநய் அவரு எங்க கைமா பண்ணார். காதலுக்கு மெருகுதான் ஏத்தனார். (சரி ’பண்ணார்’ மூனு சுழி நா வா இல்ல 2 சுழி நா வா, மூனுக்கு எத்தன சுழி நா... யப்பா பெருங்குழப்பம்..முடியல)

    ReplyDelete
  11. விநய்...நீங்க ஒரு படி மேல போயிட்டீங்க...

    ReplyDelete
  12. அழகாய் இருந்தது விநாயகமுருகன்

    ஜேகே

    ReplyDelete
  13. காலத்துக்கு ஏத்த காதல் தானுங்க...

    ReplyDelete