டாமியின் வீட்டுக்காரர்
--------------------
நாயோடு அவர் பேசிக்கொண்டே வருவார்
அண்ணாந்து அவரை பார்த்தபடி
கூடவே வரும் குள்ள டாமி.
என் வீடு வந்ததும்
மூவருமாய் நடை பயிற்சியை தொடருவோம்
எதைக் கேட்டாலும்
ஏடாகூடமாகவே பதில் சொல்லுவார் அவர்
டாமியின் மொழி தெரியுமா? கேட்டால்
இந்த நாய் என் பொண்டாட்டிபோல என்பார்
நாயும் பொண்டாட்டியும் ஒன்றா? கேட்டால்
நாயென்று சொல்லக்கூடாது கத்துவார்
நாய்களை பற்றி நீள நீளமாய் விவரிப்பார்
லேட்டா வந்தா அல்வாவோடதான் வரணுமென்று
சொல்லாதாம் நாய்கள்
பிளாட்டின நெக்லஸ் கேட்காதாம் நாய்கள்
வார இறுதியில்
மாயாஜால் போக வேண்டுமென்று அழுவாதாம்
புதுமாடல் பைக் கேட்காதாம்
குறிப்பாக துணிக்கடைகளில்
நாள்கணக்கில் காக்க வைக்காதாம்
செல்போனில் மணிக்கணக்காய்
அரட்டையடிக்காதாம்
விடைபெறும்போது கேட்க தோன்றியது
இத்தன வருசமாய் எப்படிங்க
இதோட குப்பை கொட்டுறீங்க…?
பதில் சொல்ல வாய் திறந்தார்.
உங்களிடம் கேட்கவில்லை
டாமியிடம் கேட்டேன்
அவர் முகம் சுருங்கிவிட்டது
தன் மனைவியிடம்
வேறு ஆண்கள் பேசுவதை
விரும்பமாட்டார் போலும்
:-)
ReplyDeleteஅய்யோ...அய்யோ....
ReplyDeleteநாயோடு அவர் பேசிக்கொண்டே வருவார். அண்ணாந்து அவரை பார்த்தபடி கூடவே வரும் குள்ள டாமி. என் வீடு வந்ததும் மூவருமாய் நடை பயிற்சியை தொடருவோம். எதைக் கேட்டாலும் ஏடாகூடமாகவே பதில் சொல்லுவார் அவர்.
ReplyDeleteடாமியின் மொழி தெரியுமா? கேட்டால் இந்த நாய் என் பொண்டாட்டிபோல என்பார். நாயும் பொண்டாட்டியும் ஒன்றா? கேட்டால் நாயென்று சொல்லக்கூடாது கத்துவார். நாய்களை பற்றி நீள நீளமாய் விவரிப்பார். லேட்டா வந்தா அல்வாவோடதான் வரணுமென்று சொல்லாதாம் நாய்கள். பிளாட்டின நெக்லஸ் கேட்காதாம் நாய்கள்.
வார இறுதியில் மாயாஜால் போக வேண்டுமென்று அழுவாதாம். புதுமாடல் பைக் கேட்காதாம். குறிப்பாக துணிக்கடைகளில் நாள்கணக்கில் காக்க வைக்காதாம். செல்போனில் மணிக்கணக்காய் அரட்டையடிக்காதாம்.
விடைபெறும்போது கேட்க தோன்றியது, இத்தன வருசமாய் எப்படிங்க இதோட குப்பை கொட்டுறீங்க…?
பதில் சொல்ல வாய் திறந்தார்.
”உங்களிடம் கேட்கவில்லை. டாமியிடம் கேட்டேன்!” அவர் முகம் சுருங்கிவிட்டது. தன் மனைவியிடம் வேறு ஆண்கள் பேசுவதை விரும்பமாட்டார் போலும்.
இது கவிதையா? குமுதம் ஒருபக்க கதை போலவே இருக்கிறது.
ReplyDeleteவிநய், படித்ததும் நினைவுக்கு வந்த கவிதை. எழுதியவர் யாரென தெரியாது.
ReplyDeleteவசதி படைத்தவர்கள்
தங்கள் நாயுடன்
வாக்கிங் செல்கின்றனர்
வசதியற்றவர்கள்
தங்கள் மனைவியுடன்
கடற்கரையில்
நடந்து செல்கின்றனர்,
அன்பு விநாயகமுருகன்,
ReplyDeleteஎனக்குப் பிடிச்சது இந்த கவிதை... நிறைய சிரிக்கத் தோன்றியது... ஆனாலும் அடக்கிக் கொண்டேன், என்னைப் பற்றி இது மாதிரி எதிர் வீட்டு அங்கிள் கவிதை எழுதலாம்... எதுக்கு வம்பு...
சரி சரி சீஸர் குலைக்குது... என்னன்னு பாத்துட்டு வரேன்.
அன்புடன்
ராகவன்
என்னத்தை சொல்ல..சிரிப்பு தான் வருது....
ReplyDeleteபக்கத்து வீட்டில் உள்ள டாமி ஞாபகம் வந்துவிட்டது :-)
ReplyDelete:-)))))))))))))))))))))))))))))))))
ReplyDelete