எங்கள் காதல்
—————————————
வலதுப்பக்கம் வருபவள் கமலா
இடதுப்பக்கம் வருபவள் விமலா
நடுவில் வருபவள்தான் சசிகலா
கமலாவுக்கு தெரியாது
ஒருநொடி மானசீகமாக
விமலாவை பார்த்தது
கமலாவை திருட்டுத்தனமாக
பார்த்தது விமலாவுக்கு தெரியாது
இருவரையும் பார்த்தது
சசிகலாவுக்கு தெரியவே தெரியாது
சசிகலாவை இப்படி
திருட்டுத்தனமாக பார்க்க வேண்டிய
அவசியம் எனக்கு இல்லை
ஏனென்றால் அவள்தான் என் காதலி
மனைவியுடன் ஒரு சண்டை
——————————————————————————
சிலநேரங்களில்
குரங்கை பிடித்து
கிளியின் கையில் கொடுப்பதும் உண்டு
கிளி பேச குரங்கு கேட்க
குரங்கு கேட்க கிளி பேச
என்று பார்க்க
தமாஷாகத்தான் இருக்கும்
உலகளந்தவர்
—————————————
பக்கத்து நாற்காலியில்
குடித்துக்கொண்டிருந்தவர்
முட்டைதோசையை பார்த்தபடி
முணுமுணுப்பது தெரிந்தது
நாசுக்காக கவனித்தேன்
நிலா மாதிரி வட்டமா இருக்கு என்றார்
மெல்லிய குரலில்
வட்டம் வட்டமா முட்டை என்றார்
முட்டைக்குள் ஒரு வட்டம் என்றார்
சன்னமாக ஒலித்தது
வட்டம்….நிலா…உலகம்
ஏதோ கவிதை போல இருந்தது
திரும்பி பார்த்தபோது
வாயில் உலகம் தெரிந்தது
வாக்குமூலம்
————————————
திருட்டு தம் அடிக்க
சுப்பிரமணி கற்றுக்கொடுத்தான்
பீர் குடிக்க கற்றுக்கொண்டது
எதிர் வீட்டு கோபாலனிடம்
சைட் அடிக்க சென்றது
மேலத்தெரு நண்பர்களோடு
இந்த பலான படம்
பார்க்கச் சென்றது மட்டும்
நானே எனது சொந்த முயற்சியில்
அதுவும் டி.வியில் பார்த்த
மகாபாரத ஏகலைவனின் பாதிப்பில்
ஒரு நாள்
—————————
ஒரு நாள் செத்துவிடுவோம்
என்றே நம்புகின்றோம்
ஒவ்வொருவரும்
அந்த ஒருநாள்
எது என்பதில்தான்
பிரச்சினையே
எல்லாக் கவிதைகளும் அருமையாக இருந்தன.
ReplyDeleteFirst fours.. THE BEST FOURS :)
ReplyDeleteஉண்மையிலேயே தோரணம்தான். கடைசியைத் தவிர மற்ற அனைத்தும் கலக்கல்.3& 4 கலக்கலோ கலக்கல்.
ReplyDelete