காதலர் தின ஸ்பெஷலாக வந்த இந்த வார விகடனில் எனது மூன்று கவிதைகள்...
இமைச்சிறகு
முதல்முறை பார்த்தபோது
கோயில் தூணில்
நான் தட்டிச்சென்ற
திருநீறை பூசிக்கொண்டிருந்தாய்
காதல் தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்குமென்று அறிந்தேன்
ஒரு மழை இரவில்
எதிர் ஜன்னலில் நீ
உன் அக்கா குழந்தைக்காக
கத்திக்கப்பல் செய்து
விளையாட்டு காட்டுகிறாய்
ரசிக்கிறேன் நான்
கன்னத்தில் கைவைத்தபடி
யாரோ குரல் ஒலிக்க
ஓடுகிறாய் உள்ளே
மீண்டும் ஒரு பார்வை வீசி…
கத்தி இறங்கியது.
கப்பல் மூழ்கியது
ஒரு நிமிடத்தில்
இருபது எஸ்எம்எஸ்
அனுப்பியது உலக சாதனைதான்
அதைச் சொல்லப்போக
முப்பது முறை
இமைகளை சிறகடித்து
அதையும் முறியடித்தாய்
செவி குளிர்ந்த காதல் மொழிகள்..வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteவிநய், கவிதைகள் வரப்போவதை முன்பாகவே அறிந்தேன். வாழ்த்துகள். கவிதை அருமை. (அகநாழிகைக்கும் அனுப்புங்க)
ReplyDeleteஆஹா.. காதல் ... :)
ReplyDelete//காதல் தூணிலும் இருக்கும்
ReplyDeleteதுரும்பிலும் இருக்குமென்று அறிந்தேன்//
அருமையான வரிகள் நன்பா ...
அருமை.. விகடனில் உங்களின் நிறையக் கவிதைகளைப் படித்திருக்கிறோம்.. வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் வினய். :)
ReplyDeleteரசித்தேன்....
ReplyDeleteசும்மா பின்னி எடுக்கறீங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் விநாயகன்முருகன்
ReplyDeleteஉங்களின் இந்த கவிதைகளை ஆ.வி லேயே படிச்சேன் தோழரே...அந்த கலர் புல் பக்கத்துல படிக்க ரொம்ப அழகா இருந்தது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
ReplyDeleteஆகா!
ReplyDeleteவாழ்த்துக்கள் விநாயகம்!
எனகென்னவோ தெத்துப் பல்லின் பக்கத்துப் பல்தான் பிடிச்சிருக்கு.
:-)
நன்றி தமிழரசி
ReplyDeleteநன்றி வாசு
நன்றி அசோக்
நன்றி ராஜா
நன்றி உழவன்
நன்றி நாணல்
நன்றி மாதவராஜ்
நன்றி அண்ணாமலையான்
நன்றி நந்தா
நன்றி கமலேஷ்
நன்றி பா.ரா
மூன்றுமே வெகு அருமை. விகடனிலும் பிற இணைய இதழ்களிலும் தொடர்ந்து வரும் உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன். நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு,
ReplyDelete//அதைச் சொல்லப்போக
முப்பது முறை
இமைகளை சிறகடித்து
அதையும் முறியடித்தாய் //
ரசித்தேன் ,
நன்றி வினய்
ஜேகே
மிக அருமை... குறிப்பாக,
ReplyDelete//காதல் தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்குமென்று அறிந்தேன்.//
வாழ்த்துக்கள்..