சூலம்
வடக்குத்தெரு ராமசாமி
வட்டிப்பணம் தந்து ஆறுமாதமாகிறது
வசூலிக்க கிளம்புகையில்
தொலைக்காட்சி ஜோதிடசிகாமணி
மேஷ ராசி அன்பர்களுக்கு
வடக்கே சூலம்
தென்கிழக்கு திசையே உகந்தது
உகந்த நிறம் பச்சை
பச்சை சட்டையுடன்
பின்வாசல் வழியாக கிளம்பினேன்
தெற்குதெருவில் நுழைந்து
மேற்கில் ஒரு முட்டுச்சந்தில்
மதில்மேல் ஏறிக்குதித்தேன்
பிறகு கிழக்குப்பக்க
தேனீர்க்கடையில் நுழைந்து
தென்கிழக்காக வந்து
ராமசாமி வீட்டுக்குள் குதித்தேன்
சூலத்தை குழப்பிவிட்டு
வீட்டுக்குள் நுழைகையில்
சன்னமாய் கேட்டது
சில விசும்பலொலிகள்
சில ஒப்பாரிகள்
நேற்று இரவு யாரோ
டாஸ்மாக் கடையில்
சூலத்தால் குத்திவிட்டானாம்
ராமசாமி குடல் சரிந்துவிட்டதாம்
சரியான நக்கல் நண்பா..:-))))
ReplyDeleteசூலம் கிண்டலா இருந்தாலும்
ReplyDeleteகாக்கா உக்காற பனம்பழம் உழுந்த கதையா போச்சே
//வடக்குத்தெரு ராமசாமி// - இது எதோ அந்த கவுண்டமணி செந்தில் காமெடிய உல்டா பண்ண மாதிரி இருக்கு.... வடக்குபட்டி ராமசாமி! நல்ல கிண்டல் வினய்!
ReplyDeleteவடக்குப்பட்டி ராமசாமியிடம் கடன் வசூலிக்கச் செல்கையில் ரத்த காவு எல்லாம் வாங்குமாம் :)
ReplyDeleteசரிங்கணா
ReplyDeleteநல்லா இருக்குங்க... நாத்திக நக்கல்!
ReplyDelete:-))))
ReplyDeleteNice One.
ReplyDelete