முன் இருக்கையில்
------------------
முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை.
தலையில் இருந்து
உதிர்ந்தாலும்
தாங்க முடியும்.
கையிலிருந்து உதிர்கின்றன.
அரைகுறை இருட்டில்
வளையலோடு, சிரிப்பு சத்தமும்.
காலில் நசுங்குகின்றன
மல்லிகைப்பூ பாப்கார்ன்கள்.
யப்பா... கவித எழுதறதுதான் உங்க குறிக்கோள் போலயிருக்கு.. எல்லா எடத்தலயும் உங்கள் கவிதைக்கான கருப்பொருளை கண்டு எடுக்கிறீர்கள்.
ReplyDeleteபாத்து விநாயக் பைத்தியம் ஏதாவது புடிச்சிடபோது.
poraamaiya ungalukku
ReplyDeleteமுன் இருக்கையில்
ReplyDeleteயாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது
பூ
தாங்க முடியவில்லை
(கல்யாண்ஜி)
இந்தக் கவிதைக்கான தொடர் கவிதையா இது?
நன்றி அசோக்
ReplyDeleteநன்றி பாலா (ஆதங்கம்)
நன்றி சுந்தர்
(கல்யாண்ஜியின் தொடர் கவிதைதான்)
தியேட்டருக்கு போனா படத்த மட்டும் தான் பார்க்கணும். why front seat?
ReplyDeleteவாங்க ரவிசங்கர்.
ReplyDeleteபார்க்காம இருக்க முடியலீங்க