இந்த வார திண்ணை.காமில் வெளியான எனது "நண்பனின் காதலி" கவிதை வாசிக்க...
நண்பனின் காதலி
----------------
பெண்விடுதலை பற்றி
அதிகம் பேசும் நண்பனொருவன்
தொலைபேசியில் வந்தான்.
தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக
தயங்கியபடி சொன்னான்.
ஆச்சர்யத்துடன் விசாரித்தேன்.
அவளைப்பற்றி வர்ணிக்க ஆரம்பித்தான்.
புதுமைப்பெண் என்றான்.
நிமிர்ந்த நன்னடையாம்.
நேர்கொண்ட பார்வையாம்.
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளாம்.
திமிர்ந்த ஞானச்செருக்கு கொண்டவளென்றான்.
உனக்கேற்ற செம்மை மாதர்தான்
சிரித்தபடி வாழ்த்தினேன்.
அசப்புல பார்க்க
அவள் மாதிரியே இருப்பாளென்று
சினிமா நடிகையொருத்தியின்
பெயரை குறிப்பிட்டான்.
கடைசியில் சொன்னதை
மீண்டும் அழுத்திச் சொன்னான்.
-நன்றி
என்.விநாயக முருகன்
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDelete//அசப்புல பார்க்க
ReplyDeleteஅவள் மாதிரியே இருப்பாளென்று
சினிமா நடிகையொருத்தியின்
பெயரை குறிப்பிட்டான்.
கடைசியில் சொன்னதை
மீண்டும் அழுத்திச் சொன்னான்.//
என்னத்தச் சொல்ல!
கலக்கிபுட்டீய!
தீபாவளி வாழ்த்துக்கள்!
-கேயார்
நன்றி நேசமித்ரன். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அசோக். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நன்றி கேயார்.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
Sir, உங்க கற்பனைக்கு ஒரு எல்லையே கிடையாது...கீப் ராக்கிங்...
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!!
வாங்க ரவி.நன்றி
ReplyDeletenalla irukku nv murugan
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDelete