இயற்கை
-----------
இயற்கையென்ற தலைப்பில்
சிறுமியொருத்தி வரைந்த ஓவியத்துக்கு
ஆறுதல் பரிசு கூட தரவில்லையாம்.
அழுதபடியே சொன்னாள்.
வாங்கி பார்த்தேன்.
வெள்ளைத்தாளில் பெரிய அளவில்
இரண்டு முக்கோணங்களை
அருகருகே வரைந்திருந்தாள்.
ஒரு அரைவட்டத்தால்
முக்கோணங்களை இணைத்திருந்தாள்.
பிறைநிலவாம்.
மலைகளின் அடியில்
நெளி நெளியாக கிறுக்கியிருந்தவள்
ஆறு வரைந்தேன் என்றாள்.
ஆர்வமாக உற்றுப்பார்த்தேன்.
ஆற்றின் மேலே
ஆனந்தமாய் நீந்தும் மீன்கள்.
ஆற்றோரம் தென்னை மரங்கள் கூட.
ஓடமொன்றை காண்பித்தாள்.
மீன்களுக்கு அடிபடாமல் இருக்க
ஓடத்தின் பாதிமுனை மலை மேல் இருந்தது.
ஓடம் எப்படி மலையேறும்?
இதைச்சொல்லி நிராகரித்தார்களாம்.
சிரித்தபடியே அவளிடம் தந்தேன்.
ஓடமும் ஒருநாள் வண்டி ஏறும்போது
மலையேறினால் என்ன தப்பு?
விநாயக்.. இன்னும் செதுக்கி (வார்த்தைகளை கட்ப்பா)இருந்தால் அழகிய கவிதையாகியிருக்குமோ?
ReplyDeleteThaniya room pottu yosippeengalo? Super...Sir.
ReplyDeleteம்ம்ம்ம்ம் நல்லாஇருக்குங்க.
ReplyDeleteஒரு வேளை,
ReplyDeleteஇயற்கையாயிருந்ததால் தானோ
நிராகரிப்பு?!
நன்றி அசோக்
ReplyDelete(நானும் அப்படித்தான் நினைத்தேன்)
நன்றி ரவி
நன்றி கருணா
நன்றி கேயார்