Tuesday, October 13, 2009

கல் யானை & ராக்கெட் விளையாட்டு

கல் யானை
———————————
ஒற்றைக்கல் யானையருகே
கல்வி சுற்றுலாவுக்கு வந்த
குழந்தைகள் நின்றிருந்தனர்
வாய்பிளந்து பிரமித்தபடி.
துடுக்கு சிறுமியொருத்தி கேட்கிறாள்.
இது கரும்பு திங்குமா அங்கிள்?
புரியாமல் குழம்புகிறேன்.
யானையென்றால்
கரும்பு திங்க வேண்டுமென்பது
பொது விதியா?
கரும்புகூட திங்க தெரியாமல்
என்ன யானை இதுவென்று
நகர்கிறாள் திட்டியபடி.
மகேந்திரவர்ம காலத்து
மோசமான யானையொன்று
புராதன பெருமைகளை இழந்து
பரிதாபமாக பார்த்தது என்னை.

ராக்கெட் விளையாட்டு
————————————————————

ஐந்தாம் வகுப்பு
வனஜா டீச்சர் மேல்
ராக்கெட் விட்டதாக
சிறுகதையொன்றின் வரிகளை
வாசிக்க நேரிட்டது.
சிறுவயது பள்ளி நிழலாடியது.
கூடவே உள்ளுக்குள் சிறு குழப்பம்.
வனஜாவா? தனுஜாவாவென்று தெரியவில்லை.
காலஇயந்திரம் குழம்பி நின்ற கணத்தில்
சிறுபேப்பர் ஒன்றை மடித்து
பறக்கவிட்டேன்.
வனஜாவா? தனுஜாவா?
அடுக்களையிலிருந்து வந்த மனைவி
வினோதமாக பார்த்தபடி கேட்டாள்.
இதென்ன சின்னப்புள்ளையாட்டம்!?

10 comments:

  1. காலஇயந்திரம் குழம்பி நின்ற கணத்தில்
    சிறுபேப்பர் ஒன்றை மடித்து
    பறக்கவிட்டேன்
    மோசமான யானையொன்று
    புராதன பெருமைகளை இழந்து
    பரிதாபமாக பார்த்தது என்னை

    இந்த கவித எப்டியிருக்கு விநாயக் ;)

    ReplyDelete
  2. photo finishing இல் தான் தெரிந்தது,ஒரு நூல்,ஒரே ஒரு நூல் இந்த கவிதை முந்துகிறது,மூன்றாவதாய்,அசோக் எழுதியது.ஊக்க மருந்து காரணமாதலால்,பரிசு ஒரிஜனலுக்கு போகுது.கல்லாட்டம் அசோக்...:-)

    .இரண்டும்,அருமையான கவிதைகள் விநாயகம்!செமை form!

    ReplyDelete
  3. முதல் கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க. அருமை.

    ReplyDelete
  4. enakkum muthal kavithai romba pitiththirukkiRathu

    ReplyDelete
  5. இரண்டும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  6. வாழ்வின் நிகழ்வுகளை
    இயற்கைத் தமிழில்
    அருமையாய் வடித்தமைக்கு நன்றி!

    அருமையான கவிதைகள்!
    வளரட்டும் உமது பணி!

    ReplyDelete
  7. நன்றி அசோக்
    நன்றி ராஜாராம்
    நன்றி சுந்தர்
    நன்றி மண்குதிரை
    நன்றி கருணாகரசு
    நன்றி நண்பா

    ReplyDelete
  8. டீச்சர் மேல விட்ட ராக்கெட்...!!! அந்த டீச்சர் தான் உங்க சமையலறையில் இருந்து வெளியே வந்தாங்களோ ? Anyway Super.! Continue Vinay.!!!

    ReplyDelete
  9. இது உண்மையில் நிகழ்ந்த சம்பவமா இல்லை உங்கள் கற்பனையா? எப்படி இருப்பினும் கவிதைகள் மிகவும் அருமை...

    சம்பவம் நிகழும் தருணங்கள் யதார்த்தமாய் உள்ளன..

    ReplyDelete
  10. நன்றி ரவி
    நன்றி சபரி
    அன்றாட வாழ்வின் எளிய அவதானிப்புகள்தானே மனதில் காட்சிகளாய் ஓடி எழுத வைக்கின்றது

    ReplyDelete