Saturday, October 24, 2009

பளிச் கவிதை - 1 --- "அறை"

எனக்கு பிடித்த கவிஞர்கள்/சமீபத்தில் ரசித்த கவிதைகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

அறை
------
கலவியில் முந்திய விந்துக்கு
நடிக்கத் தெரியாத மனைவியை
உப்புக் கரையாத தோசைக்கு
அறைவேன்

அழகாய் இருக்கும் மாணவியை
அடிக்கடி அழ வைக்க கையெழுத்து
நல்ல காரணம்

முதலையின் பற்கள் குறித்த கேள்விக்கு
அவளை நான் கடைசியாய் அறைந்தேன்
முத்தமிடும் வேட்கை மிக

முத்தமும் சிலுவையும் இணை பிரியாதவை
முத்தமிட்டு சிலுவையில் அறைந்தாலும்
சிலுவையிட்டு முத்தம் பறந்தாலும்

பேரறிவாளன் நான்
நாடகங்களில் நீண்ட வசனம் பேசும்
ஷைலக்கின் பாத்திரம் எனதே
கடைசி விருந்து நாடகத்திற்கு உங்களுக்கு
அனுமதி இலவசம் ஆண்டோனியோ

- நேசமித்ரன்

நன்றி: நேசமித்ரன் கவிதைகள்


காலங்காலமாக நமது குடும்ப அமைப்பின் மூடப்பட்ட அறைக்குள் நடக்கும் வக்கிரங்களை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் வரிகள்

5 comments:

  1. உண்மைதான்.
    பளிச் போலவே பளீர் கவிதையும்.யார் இதை எழுதியது என்கிற ஆவலும், பரபரப்பும் முதல் சில வரிகளிலேயே தொற்றிக்கொண்டது.இருந்தாலும் முன்முடிவுகளைத் தவிர்க்க, பொறுமையோடு படித்துவிட்டுப் பார்த்தால்..அட ! நம்ம நேசமித்ரன். 'அவரு எப்பவுமே இப்படித்தான் பாஸ்.'

    ReplyDelete
  2. மித்ரனில் சமீபத்தில் ரசித்த கவிதை.

    ReplyDelete
  3. Thanks for the link...just started reading Mithran's blog as well. Too Good.

    ReplyDelete
  4. நன்றி முத்துவேல்
    நன்றி அசோக்
    நன்றி ரவி
    நன்றி கேயார்

    ReplyDelete