Wednesday, October 7, 2009

"சாட்சி" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது சாட்சி என்ற கவிதை வாசிக்கலாம்

சாட்சி
------
விவாகரத்து
வழக்கொன்றிற்காக
சாட்சி சொல்ல
நீதிமன்ற வளாகத்தின்
வேப்பமரத்தடியில்
காத்திருந்தபோது பார்த்தது.
ஜில்லென்ற தூறல் காற்றில்
நனைந்த சிறகுகளை
ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய்
கோதிக்கொண்டிருந்தன
தவிட்டு குருவிகள் இரண்டு.


-நன்றி
என்.விநாயக முருகன்

5 comments:

  1. ஆனால் மனிதர்களில் குருவி, யானை, குதிரை, குரங்கு என்று பல வகையுண்டு. அந்த வகை மாறும் போது விவாகரத்து ஏற்படுகிறது. அப்புறம் குருவிகள் தாலி கட்டிக்கொள்வதில்லை, அதற்கு மாமனார் மாமியார் கிடையாது :)

    ReplyDelete
  2. உங்க கற்பனையை எல்லா இடத்துலேயும் பரப்பி விட்டிருக்கீங்க...Super Sir.

    ReplyDelete
  3. நன்றி நண்பா

    நன்றி அசோக்
    (காக்கை குருவி எங்கள் ஜாதி - கற்றுக்கொள்ள இருக்கிறது ஆயிரம் நீதி)
    மாமனார் மாமியார் !? நீங்க வேற.. கூட்டு குடும்ப காலத்தோட நியூக்ளியர் பேமிலிலதான் அதிகமாக டைவோர்ஸ் நடக்குது.


    நன்றி பாலா

    நன்றி ரவிசங்கர்

    ReplyDelete