பத்து வருடங்கள் முன்பு நான் எழுதிய முதல் கவிதை. இதை தவிர மற்ற எந்த கவிதையை இப்போது எடுத்து படித்தாலும் சிரிப்பாக வருகிறது. மொக்கையாக இருக்கிறது.இந்த ஒரு கவிதை மட்டும் ஏனோ மனதுக்கு (எனக்கு) நிறைவாக இருக்கிறது
எங்களிடமும் இருக்கிறது
———————————————————————
இறைந்துக் கிடக்கும்
துணிகளை அடுக்க
அக்காவுக்கு சோம்பல்.
பிரித்துப் படித்ததை
மடித்து வைக்க
அப்பாவுக்கு தயக்கம்.
அண்ணாவுக்கு தெரியாது
அயர்ன் செய்து உடுத்தும்
கலை.
தங்கையவள் பழகவில்லை
தனித்து சென்று
சிறுநீர் கழிக்கும்
வித்தை.
யாருக்கும் கைவரவில்லை.
அவரவர் வேலைகளை
அவரவர் செய்ய.
என்ன செய்ய
எங்களிடமும் இருக்கிறது
ஒரு அம்மா.
-நன்றி
என்.விநாயக முருகன்
:))
ReplyDeletefantastic first one!!
மிக அருமை
ReplyDeleteநன்றி கார்த்தி
ReplyDeleteநன்றி இரவுப்பறவை
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி ஞானசேகர்
ReplyDelete