யூத்புல் விகடன்-ல் வெளியான எனது நான்கு கவிதைகள் வாசிக்க...
உயிர்ப்பு
..........
கொஞ்சமும்
மனதை கவர்ந்திராத
தெருநாய்க் குட்டியொன்று
ரத்தச் சகதியில்
சாலையில் கிடந்தது இனி
எப்போதும் மனதின்
ஒரு மூலை
துள்ளிக்கொண்டோ
துடித்துக்கொண்டோ இருக்கும்
பயணங்கள்
..........
ரயில் பயணங்களின்
பசுமையான நினைவுகளை
பின்னோக்கி இழுத்துப்போட்டு
விரைகிறது
தட்கல் மறுக்கப்பட்டதில்
சபிக்கபட்ட ரயிலொன்று
கரையளவு வாழ்க்கை
......................
கடலில் இருந்து
பிடித்துவரப்பட்டு
கூடைகளில் அளந்து
கடல் மண்ணில் கொட்டும்
அந்த சில கணப்பொழுதுகளில்
மட்டும் மணலிலும்
வாழப் பழகியிருந்தன
சந்திப்பிற்கு பிறகான
.........................
சந்திப்பிற்கு பிறகான
பிரிந்த தருணமொன்றில்
வீடு திரும்பிய நீ
குறுஞ்செய்தி அனுப்பினாய்
நிறைய வலித்தது
பிறிதொரு நாளில்
உன் வீட்டை
தாண்டி வருகையில்
தண்டவாளமொன்றை
கவனித்தேன்
பழுப்பும் சிவப்புமுமாய்
தீற்றலாய் கறைகள்
முன்பு எப்போதையும் விட
அதிகமாக அழுதேன்
-நன்றி
என்.விநாயக முருகன்
எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteகடைசி கவிதை கலங்கடிக்கிறது விநாயகம்.
நன்றி ராஜாராம்
ReplyDeleteயூத்துக்கு வாழ்த்துகள்
ReplyDeleteகவி வரிகள் நலம்.
நன்றி ஜமால்
ReplyDeletenalla irukku nanba
ReplyDeleteநன்றி மண்குதிரை
ReplyDeleteநான்கும் நன்று... கரையில் மீன் அதிகம் பாதித்தது.
ReplyDeleteநன்றி அசோக்
ReplyDelete